Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“சகோதரி சுப்ரியாவுக்கு எதிராக என் மனைவியை நிறுத்தி தவறு செய்துவிட்டேன்!” – புலம்பும் அஜித் பவார் | I made a mistake by fielding my wife against my sister Supriya: Ajit Pawar

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2024
in அரசியல் செய்திகள்
0
“சகோதரி சுப்ரியாவுக்கு எதிராக என் மனைவியை நிறுத்தி தவறு செய்துவிட்டேன்!” – புலம்பும் அஜித் பவார் | I made a mistake by fielding my wife against my sister Supriya: Ajit Pawar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மனைவி சுனேத்திர பவார் பாராமதி தொகுதியில் போட்டியிட்டார். அவர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார், இதையடுத்து அஜித் பவார் தனது மனைவியை ராஜ்ய சபை உறுப்பினராக்கினார். இதற்கு கட்சியில் சகன் புஜ்பால் போன்ற சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களவைத் தேர்தல் தோல்வி அஜித் பவார் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து அதிகப்படியான எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியை கைப்பற்றிய அஜித் பவார் பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தார். அஜித் பவார் கட்சி 4 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

சுப்ரியா சுலேசுப்ரியா சுலே

சுப்ரியா சுலே

தற்போது மாநில சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்காக தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதோடு 65 வயது வரையிலான ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,500 கொடுக்கும் முக்கிய மந்திரி லட்கி பஹின் யோஜனா திட்டத்தையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வேலையில் அஜித் பவார் ஈடுபட்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அஜித் பவார் அளித்த பேட்டியில், “‘நான் அனைத்து சகோதரிகளையும் நேசிக்கிறேன். அரசியலை வீட்டிற்குள் நுழைய விடக்கூடாது. எனது சகோதரிக்கு எதிராக எனது மனைவியை தேர்தலில் நிறுத்தி தவறு செய்துவிட்டேன். இது நடந்திருக்க கூடாது. ஆனால் பாராளுமன்ற குழு இது தொடர்பாக முடிவு எடுத்ததால் எனது மனைவியை தேர்தலில் நிறுத்தினேன். ஆனால் அது தவறு என்று இப்போது நினைக்கிறேன்”என்றார்.

சுப்ரியா சுலே - சுனேத்ரா - அஜித் பவார்சுப்ரியா சுலே - சுனேத்ரா - அஜித் பவார்

சுப்ரியா சுலே – சுனேத்ரா – அஜித் பவார்

செய்தியாளர்கள், “அடுத்த வாரம் வரக்கூடிய ரக்‌ஷாபந்தனுக்கு உங்களது சகோதரி வீட்டிற்கு செல்வீர்களா?” என்று கேட்டதற்கு, “நான் இப்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். நானும், எனது சகோதரியும் ஒரே இடத்தில் இருந்தால் நிச்சயம் அவரை சந்திப்பேன். விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான மேம்பாடு மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் பற்றி மட்டுமே இங்கு பேச விரும்புகிறேன். என்னைப்பற்றிய விமர்சனத்திற்கு பதிலளிக்க விரும்பவில்லை. சரத் பவார் மூத்த தலைவர். எங்களது குடும்பத் தலைவர். அவர் கூறும் எந்த விமர்சனங்களுக்கும் பதில் அளிக்க மாட்டேன்” என்றும் அஜித் பவார் கூறினார். சரத் பவாரை பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறித்து கேட்டதற்கு, “கூட்டணி கட்சி என்ன பேசுகிறது என்பதை புரிந்து பேச வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது இது குறித்து பேசுவேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

அறிவியல் ஆராய்ச்சியில் அரசு பெருமளவில் முதலீடு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

Next Post

ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அதானி முறைகேடு புகாா் விவகாரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
அதானி முறைகேடு புகாா் விவகாரம்

ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அதானி முறைகேடு புகாா் விவகாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In