International oi-Nantha Kumar R
Published: Thursday, June 22, 2023, 21:39 [IST]
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு சென்னை பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஜோபைடன் முன்பு பேசினார். அப்போது அவர், இந்தியாவின் பிரதமரான பிறகு பல முறை நான் வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தாலும் இது தான் ஸ்பெஷல் எனும் வகையில் பேசி அதற்கான காரணத்தை கூறி உருகினார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் நேற்று நியூயார்க்கில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து இன்று வாஷிங்டனில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார். அதன்படி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு என்பது அமெரிக்க அதிபர் ஜோபைடனை பிரதமர் மோடி சந்திப்பதாகும். இதற்காக இன்று பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் உள்ளிட்டவர்கள் கைக்குலுக்கி வரவேற்றனர். இந்த வேளையில் அங்கு இருந்தவர்கள் பாரத் மாதாகீ ஜே என கோஷமிட்டு அதிர வைத்தனர்.இதையடுத்து அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதிகளை ஜோபைடன், பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஜோபைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெள்ளை மாளிகை வளாகத்தில் இருநாடுகளின் உறவு பற்றி மேடையில் பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் ஜோபைடனுக்கு நன்றி. நான் இந்தியாவின் பிரதமரான பின் பலமுறை வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளேன். இருப்பினும் கூட தற்போது தான் இந்தியா-அமெரிக்காவின் மக்கள் அதிகமாக உள்ளே வர வெள்ளை மாளிகையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் கடின உழைப்பால் தான் இங்கு இந்தியாவின் பெருமைஅதிகரித்துள்ளது. உண்மையில் நீங்கள் தான் இருநாடுகளின் வலிமையான உறவுக்கு காரணம். நானும், ஜோபைடனும் இருநாடுகளின் உறவுகள் பற்றி பேச இருக்கிறோம். இந்த சந்திப்பு என்பது பாசிட்டிவ்வாக அமையும் என நம்புகிறேன். உலகம் கொரோனா நோய் பாதிப்பால் வேறு ஒரு நிலையை எட்டியது. கோவிட்டுக்கு பிறகான சிக்கல்களை தீர்க்க இந்தியாவும், அமெரிக்கவும் இணைந்து செயல்பட்டு வருகிறது. மொத்த பிரச்சனைகளை தீர்த்து உலகத்தை புதிய வடிவத்துக்கு மாறி வருகிறது. இந்த காலத்தில் இருநாடுகளின் உறவு ஒட்டுமொத்த உலகத்தின் வலிமையை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். உலக நன்மை மற்றும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காக இணைந்து செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் உறுதிபூண்டுள்ளன. இருநாடுகளின் உறவும் இன்னும் சிறப்பாக மேன்மேலும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார். முன்னதாக இந்தியா பற்றி ஜோபைடன் மேடையில் பெருமையாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 21ம் நூற்றாண்டில் மிக முக்கியம்! இந்தியாவை புகழ்ந்த பைடன்! உற்றுப்பார்த்த மோடி! திரும்பும் நாடுகள்
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Chennai Prime Minister Narendra Modi spoke to US President’s White House earlier with Jobi there. After becoming the Prime Minister of India, he said that even though I have been to the White House many times, this is a special one.
Story first published: Thursday, June 22, 2023, 21:39 [IST]

