ஜெர்மனியின் முதல் பெண் அதிபரும், ஜெர்மன் வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது அதிபர் என்ற பெருமைக்கும் உரியவர் ஏஞ்சலா மெர்க்கல். இவர் எழுதியுள்ள சுயசரிதையில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் குறித்து மோடியிடம் கவலை தெரிவித்ததாகவும், 2014 ஆம் ஆண்டு முதல் “இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லை’ என்ற கூற்றைப் பிரதமர் மோடி மறுத்திருந்த நிலையில், அதில் தனக்குக் கருத்து வேறுபாடு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஏஞ்சலா மெர்க்கல் வெளியிட்ட Freedom: memoris 1954 – 2021 என்ற 600 பக்க சுயசரிதையில் தன்னுடைய பதவிக் காலத்தில் 2005 – 2021 ஆம் ஆண்டுகளுக்கிடையே இந்தியப் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி உடனான சந்திப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் இந்தியாவின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
