ஆனால், தேர்தல் முடிவுகள் பிரசாந்த் கிஷோருக்கு சாதகமாக இல்லை. 238 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பிரசாந்த் கிஷோரின் கட்சி வெற்றிபெறவில்லை. பெரும்பாலான வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர். ஆனால், ஐக்கிய ஜனதா தளம் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், அவரின் சவால் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, “பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் படுதோல்வி மிகப்பெரிய அதிர்ச்சி. கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து நான் சரியாகத் தூங்கவில்லை. பீகாரின் அரசியல் களத்தில் எனது முயற்சிகளைத் தொடருவேன்.
எனது கட்சியின் முயற்சிகள் தேர்தல் வெற்றியைத் தரவில்லை என்றாலும், பீகாரின் அரசியல் விவாதத்தை சாதி, மதத்திலிருந்து விலக்கி, வேலைவாய்ப்பு, இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளை நோக்கி நகர்த்தி கொண்டு செல்ல முடிந்தது.
