Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‛‛ ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி” – பிரதமர் மோடி பெருமிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‛‛ ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி” – பிரதமர் மோடி பெருமிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


லெப்சா: 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடும் பிரதமர் மோடி, இந்தாண்டு,ஹிமாச்சல பிரதேச மாநிலம் லெப்சா என்ற இடத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். அவர்கள் மத்தியில் பேசும் போது, ‛‛ ராமர் எங்கு இருக்கிறாரோ அந்த இடம் தான் அயோத்தி எனக்கூறுவார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் எங்கு உள்ளனரோ அந்த இடம் தான் எனக்கு அயோத்தி” என்றார்.

பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: நமது ஆயுதப்படைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். எந்த சவாலையும் சந்திக்க வீரர்கள் தயாராக உள்ளனர். அனைத்திலும் நமது வீரர்கள் முன்னிலையில் நிற்கின்றனர். ராணுவ வீரர்களுக்கு நாடு கடைமைப்பட்டு உள்ளது.

ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய தளவாடங்கள் உற்பத்தி

தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி செல்கிறது. இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 140 கோடி மக்கள் உங்களுடன் உளளனர். உங்களுக்காக ஒவ்வொரு இந்தியரும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.

வாழ்த்துகள்

பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடுகிறேன். இங்கிருந்து மக்களுக்கு வாழ்த்து சொல்வது சிறப்பானது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். ராமர் எங்கிருக்கிறாரோ அந்த இடம் தான் அயோத்தி என கூறுவார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை, இந்திய ராணுவ வீரர்கள் எங்கு உள்ளனரோ அந்த இடம் தான் எனக்கு அயோத்தி.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

உலகம் தற்போது சந்திக்கும் பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியா மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது போன்ற சூழ்நிலைகளில் இந்தியாவின் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம். நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம். அதில் உங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
எல்லையில், வீரர்கள் இமயமலையை போல் உறுதியாக நிற்பதால், நமது நாடு பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

லெப்சா: 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடும் பிரதமர் மோடி, இந்தாண்டு,ஹிமாச்சல பிரதேச மாநிலம் லெப்சா என்ற இடத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper



.

Previous Post

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற பெற்றோர் அசாமில் கைது!

Next Post

உத்தர பிரதேசம் : 6 வயது சிறுவனைக் கவ்விச்சென்றது சிறுத்தை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உத்தர பிரதேசம் : 6 வயது சிறுவனைக் கவ்விச்சென்றது சிறுத்தை!

உத்தர பிரதேசம் : 6 வயது சிறுவனைக் கவ்விச்சென்றது சிறுத்தை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In