Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பதி கோவில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய யூடியூபர்.. பலத்த சோதனையை மீறி வந்தது எப்படி?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 17, 2025
in அரசியல் செய்திகள்
0
திருப்பதி கோவில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய யூடியூபர்.. பலத்த சோதனையை மீறி வந்தது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில், உலக பிரசித்திபெற்றதாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் திருப்பதி ஏழுமலையான் கோவில் முதலிடத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஏழுமலையான் கோவிலில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

இதில், திருப்பதி மலையின் பாதுகாப்புக்காக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தலைமையில், தேவஸ்தானத்திற்கு என்று சொந்தமாக விஜிலென்ஸ் துறை ஒன்று இயங்கி வருகிறது. அத்துடன், ஆந்திர மாநில சட்ட ஒழுங்கு போலீசார், மாநில ஆயுத போலீஸ் படை போலீசார், மாநில சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு என்று, சிறப்பு பயிற்சி பெற்ற ஆக்டோபஸ் போலீஸ் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்காணிப்பு பணிகளுக்காக திருப்பதி மலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு பட்டாசு வெடிக்க கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ட்ரோன்களை எடுத்து செல்லவும் தடை அமலில் உள்ளது. திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் அலிப்பிரி சோதனை சாவடியிலேயே பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்யும்போது, ட்ரோன்களை மறைத்து வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்.

இந்நிலையில், இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி, செவ்வாய்க்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. அன்னதான கூடம், பூந்தி தயாரிப்பு நிலையம், லட்டு பிரசாத கூடம், வராக சாமி கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பறந்து பறந்து ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. திடீரென ட்ரோன் ஒன்று ஏழுமலையான் கோவில் மீது பறப்பதை அறிந்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, இளைஞர் ஒருவர் ட்ரோனை பறக்கவிட்டு வீடியோ பதிவு செய்ததை கண்டுபிடித்து, அதை கீழே இறக்க வைத்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அன்ஷுமன் தரேஜா என்பது தெரியவந்தது. பிரபல யூடியூபரான அன்ஷுமன், தனது சேனலில் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சட்டவிரோதமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இதற்காக, சோதனை சாவடியில் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ட்ரோனை மேல் மலைக்கு எடுத்து வந்துள்ளார். பின்னர், விஜிலென்ஸ் துறையினர், அந்த இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

யூடியூபர் அன்ஷுமனை கைது செய்த போலீசார், அவர் ஏதேனும் உள்நோக்கத்துடன் வீடியோ பதிவு செய்தாரா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலத்த பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி, யூடியூபர் ஒருவர் ஏழுமலையான் கோவிலில் ட்ரோன் பறக்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியம் காட்டப்படுகிறதா? என்ற கேள்வியும் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Location :

Tirupati,Chittoor,Andhra Pradesh

First Published :

April 16, 2025 7:24 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

திருப்பதி கோவில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய யூடியூபர்.. பலத்த சோதனையை மீறி வந்தது எப்படி?



.

Previous Post

நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் கொடூர தாக்குதல் – 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் யார்? |Chinnadurai

Next Post

Ananda Vikatan – 23 April 2025 – கார்ட்டூன்: சிரிங்க… சிரிங்க… சிரிச்சமேனிக்கே இருங்க..! | cartoon april 23 2023

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Ananda Vikatan – 23 April 2025 – கார்ட்டூன்: சிரிங்க… சிரிங்க… சிரிச்சமேனிக்கே இருங்க..! | cartoon april 23 2023

Ananda Vikatan - 23 April 2025 - கார்ட்டூன்: சிரிங்க... சிரிங்க... சிரிச்சமேனிக்கே இருங்க..! | cartoon april 23 2023

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In