Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

TNPSC குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 3, 2024
in Default
1
TNPSC குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3, குரூப் 4 என ஒவ்வொரு வகையான பணி இடங்களுக்கும் வெவ்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஜூலை 12ஆம் தேதி குரூப் 1 பி, 1 சி தேர்வு

அந்த வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அதிகாரி பணிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம்  வெளியிட்டது. இதற்கு மே இறுதி வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று பிற்பகலில் நடைபெற உள்ளது. கணினி வழியில் கொள்குறித் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டு தேர்வாணையத்தின்‌ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும்‌ www.tnpscexams.in-ல் பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ செய்யும்‌ தளத்தின்‌ (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே தங்களது விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என அறிவுறுத்தப்படுகிறது.

முழுமையாக விவரங்களை அறிய https://tnpsc.gov.in/Document/english/05_2024_ENG_.pdf என்ற அறிவிக்கையைக் காணலாம். இதில் தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

முதல்நிலைத் தேர்வு

பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரத்தில்) – 175 கேள்விகள்

திறனாய்வு மற்றும் மனத்திறன் தேர்வு – 25 கேள்விகள்

  • கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.

முதன்மைத் தேர்வு

உதவி ஆணையர் பதவிக்கு

முதல் தாள் – தமிழ் தகுதித் தேர்வு  (10ஆம் வகுப்புத் தரம்) – 100 மதிப்பெண்கள்

இரண்டாம் தாள் – பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரம்)- – 250 மதிப்பெண்கள்

மூன்றாம் தாள் – இந்து சமயம் (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள்

4ஆம் தாள் – சட்டம் (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள்

மொத்தம் – 750 மதிப்பெண்கள்

நேர்காணல் – 100 மதிப்பெண்கள்

கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/

Previous Post

உத்தவ் தாக்ரே பளார்…சிவன் படத்தை காட்ட விடாமல் இந்து தர்மத்தை அவமதித்ததுவிட்டது பாஜக..

Next Post

சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறாரா அண்ணாமலை.?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறாரா அண்ணாமலை.?

சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறாரா அண்ணாமலை.?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In