“மழை பேஞ்சாலும் சரி, வெயில் அடிச்சாலும் சரி விவசாயத்துல திடீர்னு ஒரு செலவு வருது… அங்க, இங்க போய் நிக்காம எளிதா கடன் கிடைக்குமா?’ என்ற கேள்வி விவசாயிகளிடம் அதிகம் எழும். அந்தக் கேள்விக்கான பதில் ‘கிசான் கிரெடிட் கார்டு’.
கடந்த சனிக்கிழமை தாக்கல் ஆன மத்திய பட்ஜெட்டில், கிசான் கிரெடி கார்டுகளின் குறுகிய கால கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
‘இந்தக் கிரெடிட் கார்டை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…எப்படி விண்ணப்பிக்கலாம்’ என்பதை தெரிந்துகொள்வோம். வாங்க…
விவசாயிகள், கூட்டு விவசாயிகள், குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டுகளை பெறலாம். இந்தக் கிரெடிட் கார்டு மூலம் குறைந்தபட்சம் ரூ.5,000-மும், அதிகபட்சம் ரூ.5 லட்சமும் கடனாக பெற முடியும்.
வயது வரம்பு: 18 – 70.

இந்தக் கிரெடிட் கார்டுகள் மூலம் பெறப்படும் தொகையை…
-
பயிர்களை பயிரிட;
-
அறுவடைக்கு பின்பான செலவுகளுக்கு;
-
பயிர்களை சந்தைப்படுத்த தேவையான காசு;
-
விவசாயிகளின் வீடுகளின் நுகர்வு தேவைக்கு;
-
விவசாயம் மற்றும் விவசாய நிலங்களுக்கு சம்பந்தமான பரமாரிப்பு செலவுகளுக்கு,
-
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த முதலீடுகளுக்கு
– போன்றவைகளுக்கு பயன்படுத்தலாம்.

