Last Updated:
பிரதமர் மோடி 38 முறை வெளிநாடு பயணங்களுக்காக 258 கோடி ரூபாய் செலவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 ஜூன் மாதத்தில் அமெரிக்க பயணத்துக்கு 22 கோடி ரூபாய் செலவானது.
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதற்கு 22 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
சுமார் 3 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக 258 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அதில் 2022ம் ஆண்டு மே மாதம் முதல் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பிரதமர் மோடி 38 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக பயணம், பாதுகாப்பு, உடன் சென்ற அதிகாரிகள், ஊடக தொடர்பு உள்ளிட்டவைக்காக கிட்டதட்ட 258 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்துக்காக 22 கோடி ரூபாய் செலவானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதே போல ஜப்பானுக்கு செல்ல 17 கோடியே 20 ஆயிரம் ரூபாயும், இத்தாலி பயணத்துக்கு 14 கோடியே 36 லட்சம் ரூபாயும், செலவாகி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக 2022ம் ஆண்டு நேபாள பயணத்துக்கு 80 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஜெர்மனி, மென்மார்க், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பிரதமர் மோடி அலுவல் ரீதியாக பயணம் மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
March 21, 2025 3:20 PM IST

