Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

லாபத்தை விட பல மடங்கு அதிகமாக நன்கொடை வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் : அது எப்படி முடியும்??

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 16, 2024
in Default
0
லாபத்தை விட பல மடங்கு அதிகமாக நன்கொடை வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் : அது எப்படி முடியும்??
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மிகவும் மோசமான நிதிநிலைகளை கொண்ட பல்வேறு நிறுவனங்கள், தாங்கள் ஈட்டும் மொத்த நிகர லாபத்தை விட பல மடங்கு மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளித்துள்ள தரவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-20 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரையில், நிறுவனங்கள் ஈட்டிய மொத்த நிகர லாபம் மற்றும் தாங்கள் வாங்கிய மொத்த தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் பின்வருமாறு:

  • 215 கோடி ரூபாய் ரூபாய் நிகர லாபம் மட்டுமே ஈட்டிய Future Gaming & Hotel Services நிறுவனம், 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி இருக்கிறது. இது நிறுவனத்தின் நிகர லாபத்தை ஒப்பிட்டால் சுமார் 635 சதவிகிதம்(%) அதிகமாகும்.
  • Megha Engineering & Infrastructures நிறுவனம் 7,509 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிய நிலையில், 966 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபத்தை ஒப்பிட்டால் 12 சதவிகிதமாகும்.
  • 109 கோடி ரூபாய் நிகர லாபம் மட்டுமே ஈட்டிய Qwik Supply Chain நிறுவனம் சுமார் 410 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. இது நிகர லாபத்தை விட சுமார் 377 சதவிகிதம்(%) அதிகமாகும்.
  • Madanlal நிறுவனம் 10 கோடி ரூபாய் நிகர லாபம் மட்டுமே ஈட்டிய நிலையில், 185 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கி இருக்கிறது. நிறுவனத்தின் நிகர லாபத்தை ஒப்பிட்டால் சுமார் 1,874 சதவிகிதம்(%) அதிகமாக இருப்பது தெரியவருகிறது.
  • இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான Bharti Airtel, தான் ஈட்டிய 253 கோடி ரூபாய் நிகர லாபத்தில் இருந்து சுமார் 72 சதவிகிதம்(%) அதாவது 183 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடை அளித்துள்ளது.
  • 58 கோடி ரூபாய் நிகர லாபம் மட்டுமே ஈட்டிய MKJ Enterprises நிறுவனம், 192 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கி உள்ளது. இது நிறுவனத்தின் நிகர லாபத்துடன் ஒப்பிட்டால், சுமார் 329 சதவிகிதம்(%) அதிகமாகும்.
  • Vedanta நிறுவனம் ஈட்டிய 48,372 கோடி ரூபாய் நிகர லாபத்தில் இருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கி கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபத்தை ஒப்பிட்டால் 1 சதவிகிதமாகும்.
  • 1,274 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிய Haldia Energy நிறுவனம் சுமார் 377 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. இது நிகர லாபத்தை விட சுமார் 30 சதவிகிதம்(%) அதிகமாகும்.
  • Essel Mining நிறுவனம் ஈட்டிய 3,700 கோடி ரூபாய் நிகர லாபத்தில் இருந்து 224 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி இருக்கிறது. நிறுவனத்தின் நிகர லாபத்தில் இது 6 சதவிகிதம்(%) ஆகும்.
  • Utkal Alumina நிறுவனம் 3,713 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டிய நிலையில், 145 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடை அளித்துள்ளது. இது நிறுவனத்தின் நிகர லாபத்தில் 4 சதவிகிதம்(%) ஆகும்.

மேற் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த லாபமும், தேர்தல் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கிய தரவுகளும் மிகுந்த அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Source @

Previous Post

விஷ்வகுருவா? மவுனகுருவா? : மோடியை சாடிய ஸ்டாலின்

Next Post

“முக்கியமான அரசு பணிகளில் ஒப்பந்த முறை தடுத்து நிறுத்தப்படும்”: கார்கே வாக்குறுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“முக்கியமான அரசு பணிகளில் ஒப்பந்த முறை தடுத்து நிறுத்தப்படும்”: கார்கே வாக்குறுதி

"முக்கியமான அரசு பணிகளில் ஒப்பந்த முறை தடுத்து நிறுத்தப்படும்": கார்கே வாக்குறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In