Last Updated:
குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு ஜாம் நகரில் செயல்பட்டு வரும் ஆனந்த் அம்பானியின் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை கடந்த ஞாயிறு அன்று பார்வையிட்டார்.
ஆனந்த் அம்பானியின் வந்தாரா விலங்குகள் பராமரிப்பு மற்றும் மறு வாழ்வு மையத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு யானைகள் பராமரிப்பு மையத்திற்கு சென்றார். அங்கு பராமரிக்கப்படும் யானைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்த மோடி, மனிதர்கள் எப்படி இவ்வளவு கொடூரமானவர்களாக இருக்க முடியும் என்று சமூக வலைதள பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு ஜாம் நகரில் செயல்பட்டு வரும் ஆனந்த் அம்பானியின் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை கடந்த ஞாயிறு அன்று பார்வையிட்டார்.
வன நட்சத்திரம் என்று அர்த்தம் கொண்ட வந்தாரா என்ற இந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து தொடங்கியுள்ளது. இதனை ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நிர்வகித்து வருகிறார்.
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த வந்தாரா பரந்து விரிந்து காணப்படுகிறது. இதற்குள் வன விலங்குகளுக்கான மருத்துவமனைகள், உடல் நல மையம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
வந்தாராவை பார்வையிட்ட மோடியை யானைகள் பராமரிப்பு மறுவாழ்வு மையம் பகுதி வெகுவாக கவர்ந்தது. அங்கு பராமரிப்பாளர்களிடம் யானைகள் குறித்த விபரங்களை மோடி கேட்டறிந்தார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட யானை, பார்வையிழந்த யானைகள் உள்ளிட்டவை அங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதன்பின்னர் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது-
வந்தாராவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட யானையை பார்த்தேன். அங்கு அந்த யானை மிகவும் கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. சில பார்வையற்ற யானைகளும் அங்கு பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு யானை லாரியால் மோதப்பட்டு காயம் அடைந்ததாக இருந்தது. இங்கு என் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.
At Vantara, I saw an elephant which was the victim of an acid attack. The elephant was being treated with utmost care. There were other elephants too, which were blinded and that too ironically by their Mahout. Another elephant was hit by a speeding truck. This underscores an… pic.twitter.com/dyqaFky7ku
— Narendra Modi (@narendramodi) March 4, 2025
எப்படி மனிதர்களால் இவ்வளவு கொடூரமானவர்களாக, கவனக்குறைவு உள்ளவர்களாக இருக்க முடியும்? மிருகங்கள் மீதான இந்த கொடூர தாக்குதல்களை, பொறுப்பற்ற செயல்களை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
தற்போது பிரதமர் மோடியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
March 04, 2025 7:59 PM IST
Vantara :’ மனிதர்கள் எப்படி இவ்வளவு கொடூரமானவர்களாக இருக்க முடியும்?’ யானைகளை தாக்கியவர்களை கண்டித்த மோடி

