மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எம்.கே.ஸ்டாலின், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜா, ஹிட்டாச்சி எனர்ஜியின் சிஇஓ கிளாடியோ ஃபச்சின் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜியின் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான என் வேணு ஆகியோருடன் புதிய ஹிட்டாச்சி எனர்ஜி குளோபல் டெக்னாலஜி மற்றும் புத்தாக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த மையம் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது, இது ஹிட்டாச்சி எனர்ஜி லிமிடெட், சுவிட்சர்லாந்தின் முழு சொந்தமான துணை நிறுவனமாகும்.
எரிசக்தி துறையில் 2500 க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவவும் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மகத்தான வணிகத் திறனைக் கொண்ட நாட்டின் தொழில்மயமான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. “தமிழகத்தில் வரும் இதுபோன்ற உலகத் தரம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் நமது உள்ளூர் திறமைகளின் தரத்தை பிரதிபலிக்கின்றன.
மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறப்போகும் தமிழ்நாட்டின் பார்வையை இது மேலும் கூர்மையாக்கும்.. கண்டுபிடிப்பு ,தொழில்நுட்ப மையம் மற்றும் அவைகளின் உள்ளடக்கிய வளர்ச்சி பயணத்தை நாம் எதிர்நோக்குகிறோம்” என்று திரு. எம்.கே. ஸ்டாலின் கூறினார்.
ஹிட்டாச்சி எனர்ஜியின் குளோபல் டெக்னாலஜி மற்றும் இன்னோவேஷன் சென்டர் 3,00,000 சதுர அடியில் பரந்து விரிந்து, கிட்டத்தட்ட 50,000 சதுர அடி பிரத்யேக ஆய்வக இடத்துடன் அமைய உள்ளது. இந்த வசதி, கிரிட் ஆட்டோமேஷன், டிரான்ஸ்பார்மர்கள், உயர் மின்னழுத்தம் மற்றும் கிரிட் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இளங்கலை, முனைவர் மற்றும் முதுகலை பட்டங்களுடன் 2,500 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டிருக்கும்.

