Last Updated:
ஏப்ரல் 2023-இல் கூகிள் உள்ளிட்ட சில வலைத்தளங்களிலும், யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் ஆராத்யாவுக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக அவரது தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்கள் வதந்தி பரப்பியதாக கூறி நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதனை ஏற்று கொண்டுள்ள நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலிவுட் பிரபல ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் அடிக்கடி செய்திகளில் இடம் பெறுகிறார்கள். இவர்களது மகள் ஆராத்யா டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆராத்யாவின் மனுவை ஏற்றுக்கொண்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏப்ரல் 2023-இல் கூகிள் உள்ளிட்ட சில வலைத்தளங்களிலும், யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் ஆராத்யாவுக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக அவரது தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராத்யா மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக சில யூடியூப், வலைதளங்களில் கூறப்பட்டிருந்தன.
இதற்கு தடை விதிக்கக் கோரியும், கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆராத்யா ராய் பச்சன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் போலி வீடியோக்களை நீக்க கூகிளுக்கு உத்தரவிட்டிருந்தது. வதந்திகளை பதிவேற்றியவர்களின் விவரங்களைப் பகிரவும், எதிர்காலத்தில் தவறாக வழிநடத்தும் வீடியோக்களை உடனடியாக நீக்கவும் கூகிள் நிறுவனத்திடம் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து கூகிள் உட்பட பல வலைத்தளங்களுக்கு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க – நண்பர்களுடன் ‘இந்த’ பாடலுக்கு நடனமாடிய மணமகன்… திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை
நடிகை ஐஸ்வர்யா ராய் 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் முடித்தார். இவர் பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மகன் ஆவார். ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சனுக்கு 2011 நவம்பர் 26 ஆம் தேதி ஆராத்யா என்ற மகள் பிறந்தார்.
February 04, 2025 12:53 PM IST

