அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், `சீமானுக்கு எதிரான புகாரை வேண்டுமானால் தான் திரும்பப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் அவரிடம் நிச்சயமாக மன்னிப்பு கேட்கமுடியாது. அவருக்கு எதிராக தான் குற்ற வழக்கை தாக்கல் செய்திருக்கிறேன். சீமான் எனக்கு எதிராக அப்படி எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை அப்படி இருக்கும்போது அவரிடம் நான் மன்னிப்பு கேட்க முடியாது’ எனத் திட்டவட்டமாக கூறினார்.
அப்போது சற்று கோபமடைந்த நீதிபதிகள், `நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சீமானிடம் இருந்தும் மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள். இரண்டு தரப்பும் வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டு அது தொடர்பான பிரமாண பத்திரத்தை எங்களிடம் சமர்ப்பியுங்கள். மேலும் இந்த வழக்கில் இனி இரு தரப்பும் ஊடகங்களிடம் எதையும் பேசக்கூடாது அப்படி மீறி பேசினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும்கூட இந்த வழக்குகளைப் பற்றிப் பேசக்கூடாது’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த அணுகுமுறையால் பல ஆண்டுகளாக சீமானுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த ஒரு பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளதாகப் பார்க்கப்படுகின்றது எனினும் மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் விஜயலட்சுமி உறுதியாக இருக்கும் பட்சத்தில் அதை உச்ச நீதிமன்றம் எவ்வாறு அணுகப்போகிறது என்பதும் முக்கியமான கேள்வி
