Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா…? மீண்டும் சேர்ப்பதற்கான வழிமுறைகள் இதோ…!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2025
in அரசியல் செய்திகள்
0
வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா…? மீண்டும் சேர்ப்பதற்கான வழிமுறைகள் இதோ…!
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 17, 2025 12:48 PM IST

வாக்காளர் பட்டியலில் மக்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க உதவும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விருப்பங்களை வழங்குகிறது. அதை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

News18News18
News18

வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஒரு முக்கியமான ஆவணமாகும், இது உங்கள் அடையாளத்தை நிரூபிப்பது மட்டுமல்லாமல், வாக்களிக்கும் உரிமையையும் வழங்குகிறது. இந்த அட்டை இல்லாமல் நீங்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்த வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். இருப்பினும், உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் வாக்களிக்கலாம்.

எனவே, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பது வாக்களிப்பதற்கு அவசியமாகும், அப்போதுதான் நீங்கள் வாக்களிக்க முடியும். ஏதேனும் ஒரு காரணத்தால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால், பீதி அடையத் தேவையில்லை. வீட்டிலிருந்தே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எளிதாக மீண்டும் சேர்க்கலாம்.

வாக்காளர் பட்டியலில் மக்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க உதவும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விருப்பங்களை வழங்குகிறது. அதை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

உங்கள் பெயரை ஆன்லைனில் மீண்டும் சேர்ப்பதற்கான வழிகள்:

  • முதலில் நீங்கள் தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலின் (NVSP) அதிகாரப்பூர்வ தளமான https://voters.eci.gov.in/க்கு செல்ல வேண்டும்.
  • பிறகு ‘புகாரைப் பதிவுசெய்க’ அல்லது ‘பகிர்வு பரிந்துரை’ பகுதிக்குச் செல்லவும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் ‘ரெஜிஸ்டர் கம்ப்ளைண்ட்’ அல்லது ‘ஷேர் சஜ்ஜஷன்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்களிடம் அக்கவுன்ட் இல்லையென்றால் புதிய அக்கவுன்ட்டை உருவாக்கவும் அல்லது ஏற்கனவே அக்கவுன்ட் இருந்தால் அந்த ஐடி-ஐ வைத்து லாகின் செய்யவும்.
  • தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு புகார் படிவத்தை பூர்த்தி செய்து, அதை சப்மிட் செய்ய வேண்டும்.

உங்கள் பெயரை ஆஃப்லைனில் மீண்டும் சேர்ப்பதற்கான வழிகள்:

  • இந்தச் செயல்முறையை ஆஃப்லைனில் முடிக்க, தேர்தல் ஆணையத்தின் உதவி எண்ணான 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
  • உங்கள் புகாரைப் பதிவு செய்ய, உங்கள் பகுதியின் பூத் லெவல் அதிகாரியிடம் (BLO) உதவி பெறலாம்.
  • வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்க ஃபார்ம் 6-ஐ பூர்த்தி செய்யவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட ஃபார்மை பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் ஐடி/முகவரி சான்றுடன் சமர்ப்பிக்கவும்.

ஒரே நகரத்திற்குள் முகவரியை மாற்றுவது எப்படி?

  • பல நேரங்களில் மக்கள் தங்கள் வீடுகளை மாற்றுகிறார்கள். நீங்கள் அதே நகரத்தில் வசிக்கும்போது உங்கள் பகுதியையும் மாற்றியிருந்தால், முதலில் உங்கள் பெயரை பழைய பகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
  • பழைய வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்க ஃபார்ம் 7-ஐ பூர்த்தி செய்யவும்.
  • உங்கள் புதிய முகவரிக்கான ப்ரூப்-ஐ இணைக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை உங்கள் உள்ளூர் BLO-விடம் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 17, 2025 12:48 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா…? மீண்டும் சேர்ப்பதற்கான வழிமுறைகள் இதோ…!



.

Previous Post

பாஜக, அதிமுக தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்திலும் எடுத்து சொல்லுங்கள்.. மு.க. ஸ்டாலின் பேச்சு

Next Post

15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்! Tata nexon

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்! Tata nexon

15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்! Tata nexon

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In