Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை
ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன், முதலமைச்சராக இருந்த போது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனால், தனது பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார், இதனை தொடர்ந்து அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். 5 மாதங்களாக சிறையில் இருந்த ஹேமந்த் சோரன், கடந்த மாதம் 28-ஆம் தேதி ஜாமினில் வெளியேவந்த நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மீண்டும் பதவியேற்றார்.
ஷாலினி அஜித்குமார் டிஸ்சார்ஜ் எப்போது? வெளியான அப்டேட்
நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சிகிச்சை முடிவடைந்து நார்மல் வார்டிற்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை விரைவாக சீராகி வருகிறது. இதன் காரணமாக ஓரிரு நாட்களில் ஷாலினி அஜித்குமார் இல்லம் திரும்புவார் என அவருடைய தரப்பில் கூறியுள்ளனர்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43வது முறையாக நீட்டிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 8ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ஊதிய உயர்வு : புதுச்சேரி அரசு உத்தரவு
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள்கோரிக்கையை ஏற்று, ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804/-லிருந்து, ரூ.16,796/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தைரூ.10,656/-லிருந்து ரூ.16.585/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்குவரும் என்று முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ல்
போக்குவரத்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ஊதிய உயர்வு : புதுச்சேரி அரசு உத்தரவு
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள்கோரிக்கையை ஏற்று, ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804/-லிருந்து, ரூ.16,796/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தைரூ.10,656/-லிருந்து ரூ.16.585/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்குவரும் என்று முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ல்
மோடி அவர் பெயர் பொறிக்கப்பட்ட இந்திய அணியின் ஜெர்ஸி பரிசளிப்பு
மோடிக்கு அவர் பெயர் பொறிக்கப்பட்ட இந்திய அணியின் ஜெர்ஸி பரிசளிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் வழங்கினர்.
The triumphant Indian Cricket Team met with the Honourable Prime Minister of India, Shri Narendra Modiji, at his official residence today upon arrival.
Sir, we extend our heartfelt gratitude to you for your inspiring words and the invaluable support you have provided to… pic.twitter.com/9muKYmUVkU
— BCCI (@BCCI) July 4, 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : தபால் வாக்குகளை செலுத்திய அரசு ஊழியர்கள், காவல் துறையினர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் தபால் வாக்குகளை செலுத்தினர். வாக்குப்பதிவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, எஸ்பி தீபக் சிவாஜ் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 276 வாக்குச்சாவடி மையங்களில் 575 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள நிலையில், அவற்றில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் டூ கோவை இரயில்நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை : எல்.முருகன் கோரிக்கை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் கோவை இரயில்நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைத்திட வேண்டும் என மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர், அப்பகுதி மக்களின்… pic.twitter.com/KdPilrmNoy
— Dr.L.Murugan (@Murugan_MoS) July 4, 2024
இந்திய வீரர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்து இந்திய வீரர்கள் வாழ்த்து பெற்றனர். லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தில், அவரை சந்தித்த இந்திய வீரர்கள் குழு புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். பின்னர், டி20 கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் வீரர்கள் கலந்துரையாடினர். அப்போது, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்டோரும் இருந்தனர்.
#JUSTIN உலக கோப்பையில் கை வைக்காமல் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கைகளை பிடித்தார் பிரதமர் மோடி#T20WorldCup #PMModi #Respect #Cricket #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/GiEmESzYD4
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 4, 2024
Tamil Live Breaking News : அதிமுக நிர்வாகி படுகொலை விவகாரம் – திமுக கவுன்சிலரின் கணவர் கைது
சேலம் கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சண்முகம் படுகொலைக்கு 55 வது வார்டு கவுன்சிலர் தனபாக்கியத்தின் கணவர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்முகத்தின் உறவினர்கள் கைது செய்ய கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சதீஷை கைது செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுவரை இந்த கொலை சம்பந்தமாக 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil Live Breaking News : ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த்
2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம்
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை, நீலகிரிக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மேயரிடம் சு.வெங்கடேசன் செங்கோலை கொடுத்தது ஏன்? – அண்ணாமலை கேள்வி
நாடாளுமன்றத்திற்குள் செங்கோல் வேண்டாம், வெளியே வந்தால் செங்கோல் வேண்டும் என்பது போல சு.வெங்கடேசன் உள்ளார். செங்கோலை அவர் எதிர்த்தால், மதுரை மேயரிடம் அவர் ஏன் செங்கோல் கொடுத்தார்? அப்படியென்றால் அவர் திருவள்ளுவரையும் எதிர்க்கிறாரா?
அவர் மீது எழுத்தாளராக மரியாதை இருந்தால் கூட, ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக அவர் பேசுவது பொய்யாக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.
”நான் எங்கேயும் போகப்போவது இல்லை” – அண்ணாமலை
அண்ணாமலை வெளியே போய்விட்டால் அதிமுக இழந்த இடத்தை பிடித்து விடலாம் என எண்ணுவது பகல்கனவு.
அண்ணாமலை இல்லாவிட்டாலும் வேறு யாராவது வந்து பாஜகவை வளர்பார்கள். ஜெயக்குமாரும், முனுசாமியும் செய்தியாளர் சந்திப்பு நடத்துவதால் அதிமுக அழிந்துகொண்டுதான் இருக்கும். அவர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்த நடத்த பாஜகவிற்கு ஓட்டு வங்கி அதிகரிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.
நீட் குறித்து பேச விஜய்க்கு உரிமை உள்ளது
நீட் குறித்து பேச விஜய்க்கு உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக கூட நீட் தேர்வுக்கு எதிராகதான் உள்ளது.
நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் அதற்கான புள்ளி விவரங்களை வைத்து பேசினால் நன்றாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.
திமுகவை ஜெயிக்க வைக்க அதிமுக போட்டியிடவில்லை – அண்ணாமலை
3ஆவது இடத்திற்கு சென்றுவிடுவோம் என்பதால், திமுகவை ஜெயிக்க வைக்க அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.
பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்திய வீரர்கள்
பர்படாஸில் இருந்து இன்று காலையில் டெல்லி திரும்பிய வீரர்கள் டி-20 உலகக்கோப்பையுடன் பிரதமர் மோடியின் இல்லத்திற்கு சென்றனர்.
Tamil Live Breaking News : கேக் வெட்டி கொண்டாடிய இந்திய அணி
டி20 உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய வீரர்கள் டெல்லியில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்னர் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
#WATCH | Indian Captain Rohit Sharma cuts a cake at ITC Maurya in Delhi to celebrate the ICC T20 World Cup victory. pic.twitter.com/mTE6jCaTPR
— ANI (@ANI) July 4, 2024
Tamil Live Breaking News : 3 பேர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் – 7 காவலர்கள் பணியிடை நீக்கம்
கடந்த 27ஆம் தேதி சீர்காழியில் 3 சகோதரர்கள் தக்கப்பட்ட வழக்கில் உதவி காவல் ஆய்வாளர் உட்பட 7 பேர் பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டுள்ளார்.
Tamil Live Breaking News : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அத்வானி அனுமதி
அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பையுடன் டெல்லி வந்தது இந்திய அணி
20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி டெல்லி வந்தடைந்தது.
பெரில் புயல் காரணமாக மேற்கிந்திய தீவுகளின் பர்படாஸில் தங்கியிருந்த இந்திய அணியினர் தனி விமானத்தில் தாயகம் வந்தனர்.
டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு ரோகித் தலைமையிலான இந்திய அணி பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெறுகிறது. இதனையடுத்து மும்பையில் இன்று மாலை வெற்றிப் பேரணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Rohit Sharma with the T20 World Cup trophy arrives at Delhi airport.
India defeated South Africa by 7 runs on June 29, in Barbados, to clinch the second T20I title. pic.twitter.com/fJlKsWd0xh
— ANI (@ANI) July 4, 2024
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
- First Published :
