Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கணவரின் உறவினர்கள் செயலால் மனம் உடைந்த இளம் மணப்பெண் தற்கொலை முயற்சி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கணவரின் உறவினர்கள் செயலால் மனம் உடைந்த இளம் மணப்பெண் தற்கொலை முயற்சி..!
90
SHARES
145
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராஜபாளையம் அருகே கட்டிய தாலியை அறுத்து காதல் கணவரை, கணவரின் உறவினர்கள் பிரித்ததால் மனம் உடைந்த இளம் பெண் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவிபட்டினத்தை சேர்ந்த 24 வயதான சசிக்குமாரும், சோழபுரத்தை சேர்ந்த 20 வயதான மாரீஸ்வரி என்ற இளம் பெண்ணும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர். தற்போது சசிகுமார் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். மாரீஸ்வரி தனியார் ஆலையில் கூலி வேலை செய்துவருகிறார்.

கடந்த 15 ம் தேதி கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்ட இருவரும் இரண்டு நாட்கள் கொடைக்கானலில் தங்கி கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். இதன்பின்னர் சசிகுமார், நடந்த திருமணத்திற்கு சம்மதம் கேட்டு கூட்டி செல்வதாக கூறி மாரீஸ்வரியை தென்காசி மாவட்டம் பச்சேரியில் உள்ள தனது சித்தி முனியம்மாள் வீட்டில் விட்டுவிட்டு தேவிப்பட்டினத்திற்கு திரும்பி உள்ளார்.

காதல் திருமணத்திற்கு சசிகுமாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே மீண்டும் தனது மனைவியை அழைத்து வர சித்தி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சசிகுமாரை வீட்டில் வைத்து பூட்டிய உறவினர்கள், மாரீஸ்வரியின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

தனது பெற்றோரின் உதவியுடன் சோழபுரத்திற்கு வந்த மாரீஸ்வரி மனம் உடைந்து பிளீச்சிங் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது மாரீஸ்வரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இது குறித்து மாரீஸ்வரி அளித்த புகாரின் பேரில் சசிகுமாரின் சித்தி முனியம்மாள் மற்றும் சித்தப்பா கனகராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தளவாய்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post

மனம் பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ..! – தூக்கி வீசப்பட்ட பள்ளி குழந்தைகள்.!

Next Post

காங்கிரஸின் அனைத்து பொய் வாக்குறுதிகளைவிட எனது உத்தரவாதம் மேலானது : பிரதமர் மோடி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரஸின் அனைத்து பொய் வாக்குறுதிகளைவிட எனது உத்தரவாதம் மேலானது : பிரதமர் மோடி..!

காங்கிரஸின் அனைத்து பொய் வாக்குறுதிகளைவிட எனது உத்தரவாதம் மேலானது : பிரதமர் மோடி..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    மீண்டும் சொல்கிறேன் தற்கொலை முயற்சி என்பதோ தற்கொலை என்பதோ முட்டாள் தனமானது வாழ்க்கையில் புதிது புதிதாக பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும் அனைத்தையும் எதிர்த்து போராடி வெற்றி பெற வேண்டும் அதற்கு தன்னைச் சுற்றி நல்ல நண்பர்களையும் உண்மையான உறவினர்களையும் வைத்துக் கொள்ள வேண்டும் மாரீஸ்வரி நல்லபடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பட்டும் அதன் பிறகு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In