Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அவருக்கு சின்னமும் இல்லை, ஓட்டும் இல்லை; அவரின் பேச்சையெல்லாம் கண்டுக்க வேண்டாம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 2, 2024
in Default
0
அவருக்கு சின்னமும் இல்லை, ஓட்டும் இல்லை; அவரின் பேச்சையெல்லாம் கண்டுக்க வேண்டாம்..
107
SHARES
173
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு – கேரள எல்லையான கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று காலை பரப்புரையை துவக்கினார். பின்னர் சின்ன தடாகம் பகுதியில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஆனைக்கட்டி, தடாகம் பகுதிகளில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. செங்கல் சூளை விவகாரத்தில் திமுகவினர் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டி விடும் வேலையில் தான் ஈடுபட்டுள்ளனர். செங்கல் சூளை பிரச்சினை மத்திய அரசு சார்பாக சார்பாக எந்த விதம் பிரச்சனையும் வராது என உத்தரவாதம் கொடுக்கிறோம். இங்கு ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லை. வாலிபால் மைதானம் கோரிக்கை வந்துள்ளது அதையும் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம்.

கச்சத்தீவு விவகாரம் குறித்தான முக்கிய ஆவணங்கள் இப்போதுதான் வெளியாகி, உண்மையான தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை இல்லாத ஒரு சூழல் வேண்டும். ஆழ்கடலில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க ஆர்டிகல் 6 தேவைப்படுகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். இரண்டு அரசுகள் பேசி முடிவு எடுக்க கூடிய விவகாரம் இது. சீமான் அண்ணனுக்கு சின்னம் இல்லை ஓட்டும் இல்லை. சீமான் அண்ணன் அண்ணாமலையின் ஸ்லிப்பர் செல்லா? இல்லை அண்ணாமலை சீமானின் ஸ்லீப்பர் செல்லா? பெண்கள், தாய்மார்கள் யாருக்கு ஆதரவாக உள்ளார்கள் என்று அனைவருக்கும் தெரியும். பாஜகவுக்கு ஆதரவு பெருகி உள்ளது. சீமான் அண்ணன் இதையெல்லாம் பேச தான் செய்வார் பெரிதாக கண்டு கொள்ள வேண்டாம்.

சீமானுக்கு சின்னமும் இல்லை, ஓட்டும் இல்லை அவரின் பேச்சை கண்டுக்க வேண்டாம் - அண்ணாமலை

சீமான் அண்ணாமலையின் ஸ்லிப்பர் செல்லா?

கச்சத்தீவை திரும்ப பெற வேண்டுமென இரண்டு வருடங்களுக்கு முன்பு பாஜக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கும். தமிழக மீனவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு கச்சத்தீவு நமக்கு தேவை. தனிப்பட்ட முறையில் மூன்று முறை இலங்கை சென்று அங்குள்ள அதிகாரியிடம் நான் பேசி உள்ளேன். இலங்கை அரசிடம் பேசி மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான நிரந்தரமான சூழல் ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவு எப்படி கொடுக்கப்பட்டது அதனுடைய மர்மம் என்ன என்பதுதான் நாம் பேசி வருகிறோம். கச்சத்தீவை மீட்பதற்கு அறிவியல் பூர்வமாக பேசி வருகிறோம். நெய்தல் படை அனுப்பவோம், கப்பல் படை அனுப்புவோம் என்று நாங்கள் பேசவில்லை. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட ஆவணங்கள் பொய் என்றால் என்னிடம் விவாதம் வரச் சொல்லுங்கள்.

சுப்பிரமணிய சுவாமி பேசுவது கோபம் வரத்தான் செய்யும். இத்தனை வருடமாக அவர்கள் என்ன செய்தார்கள்? ஐந்தாண்டு காலமாக சுப்பிரமணிய சாமி எந்த பொறுப்பில் இருக்கிறார்? சுப்பிரமணியசாமி யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். வயதின் காரணமாக அவரைப்பற்றி பேசாமல் இருக்கிறேன். அவர் பேசுவது கண்டுகொள்ளாமல் இருப்பது தான் நல்லது. யாரையும் குடிக்க கூடாது என்று சொல்ல முடியாது. கள்ளுக் கடையைத் திறக்க வேண்டும் என வெள்ளை அறிக்கை குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளோம். டாஸ்மாக்கை மூடுவோம் கள்ளுக்கடையை திறப்போம் அதில் உறுதியாக இருக்கிறோம். டாஸ்மாக்கில் வரக்கூடிய பணம் ஒரு கட்சி சார்ந்த குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் செல்கிறது. சாராயத்தை கொடுத்தால் மருத்துவமனையில் தான் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோம் அதில் ஆரோக்கியம் இல்லை” எனத் தெரிவித்தார்.

Previous Post

அடுத்து என்ன? சுனிதா கேஜரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆலோசனை

Next Post

வன்னியர் இடஒதுக்கீடு கிடைக்காததற்கு காரணமே இவர் தான்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வன்னியர் இடஒதுக்கீடு கிடைக்காததற்கு காரணமே இவர் தான்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்.

வன்னியர் இடஒதுக்கீடு கிடைக்காததற்கு காரணமே இவர் தான்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In