ஸ்டாலின் அவர்களே – லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் விடியா திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது, அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா? #லேப்டாப்_எங்கே_ஸ்டாலின்?” என காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு தி.மு.க தரப்பில் தற்போது வரை எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை!

தொடர்ந்து இழுத்தடிக்கும் தி.மு.க அரசு:
இதுவரையில், `இலவச லேப்டாப் வழங்குவது எப்போது?’ என பத்திரிகையாளர்கள், எதிர்கட்சியினரால் எண்ணிலடாங்கா வரை கேள்வி எழுப்பப்பட்டு விட்டன. ஒவ்வொரு முறையும் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நிதி நிலைமை சரியான பிறகு வழங்கப்படும். முதலமைச்சரே அதை அறிவிப்பார்” என டெம்ப்ளேட் பதிலையே சொல்லி வருகிறார்.
மாணவர்கள் கல்வியில் விளையாடாமல் உண்மையிலேயே எப்போதுதான் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்பதை இனியாவது அறிவிக்குமா அரசு?
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
