ஹரியானாவில் பெண் ஒருவர் தனது நகையை எடுப்பதற்காக வங்கிக்கு வந்துள்ளார். அப்போது அவரது லாக்கரை திறந்து பார்த்த ஊழியர் வாயடைத்து நின்றார். மேலும் அதிர்ச்சியடைந்த பெண், வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுமார் 50 சவரன் நகை மாயமானதால் உரிமையாளரும், வங்கி ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
பல வருடங்களுக்கு முன்னரே அந்த பெண்ணிற்கு வேறொரு வங்கியில் கணக்கு இருந்ததாகவும், சமீபத்தில் தான் இந்த அரசு வங்கியில் கணக்கு உருவாக்கி தங்கம் மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் மாற்றப்பட்ட போது அவர் வங்கிக்கு செல்லவில்லை என்றும் தற்போது அவரின் தங்கையின் திருமணத்திற்காக நகை எடுக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.
வங்கியில் இருந்து வங்கிக்கு மாறும்போது நகை காணாமல் போயிருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நகை மொத்தம் என்னோடு சேர்ந்து 3 பெண்களின் பங்கு என்றும் வங்கி ஊழியர்கள் நகையை பற்றி எதுவுமே தெரியாது எனவும் கூறுவதாக உரிமையாளர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த வழக்கு குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
.


😄😄😄😄😄😄😄😄😄😄😄😄