”எனக்கு என்னவோ நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழ்நாடு தேர்தலும் வரும் என்பது எனது அபிப்பராயம்”
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கவர்னர் ஒருவரை பார்த்து சந்தோஷப்பட்டால் அவர் மந்திரியா இருக்கலாம்; இல்லை என்றால் மந்திரி இல்லை எந்திரின்னு அரசியலமைப்பு சட்டம் சொல்லுது. கவர்னருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் உள்ளது.
பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. இவர்களை ஒன்னொன்னா அனுப்புறதா இல்லை மொத்தமா அனுப்புறதாண்ணு யோசிக்கலாம். எனக்கு என்னவோ நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழ்நாடு தேர்தலும் வரும் என்பது எனது அபிப்பராயம்.
ஆளுநர் மாளிகை முன் கல் எடுத்து அடிப்போம் என சொல்பவர்களை கைது செய்து ஜெயிலில் நிரந்தரமாக வைக்க வேண்டும்.
சேகர்பாபு எனும் அல்லோலோயோ பாபு ஆள் கடத்தல் பாபுவாக உள்ளார். தனது மகளின் கணவை ஆளை வைத்து கடத்தி சட்டவிரோதமாக 60 நாட்கள் அடைத்து வைத்திருந்தார்கள். ஆட்கொணர்வு மனுவை நான் தான் தாக்கல் செய்து சதீஷை வெளியில் கொண்டு வந்தேன்.
சேகர்பாபு கோயிலில் விளையாடக்கூடாது. 2014 உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக உள்ளது. சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கே சொந்தம். சிதம்பரம் கோயிலை கட்டியது தீட்சிதர்கள்தான் மன்னர்கள் இல்லை. சைவமதத்தின் பீடமாக இருக்கும் சிதம்பரத்தில் தலையிட்டால் உங்கள் குடும்பம் நாசமாக போகும்.
கோவில் மாடுகளை கேரளாவுக்கு வெட்ட விற்கிறார்கள் என்று எனக்கு தகவல் வருகிறது. தமிழ்நாடு முழுக்க வீடுவீடாக செல்வேன்.

