Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“முதல்வர் ஸ்டாலின் அரசு பணத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்" – சொல்கிறார் ஹெச்.ராஜா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 2, 2024
in அரசியல் செய்திகள்
0
“முதல்வர் ஸ்டாலின் அரசு பணத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்" – சொல்கிறார் ஹெச்.ராஜா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கும்பகோணம், மடத்துத்தெருவில், இந்து மக்கள் கட்சி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், சிறப்பு விருத்தினராக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அத்துடன் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத், மாநிலப் பொதுச் செயலாளர் குருமூர்த்தி, நடிகை கஸ்துாரி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் நுாறு சதவீத இந்து விரோத தீய அரசாங்கம் நடக்கிறது. இந்து தர்மம், சனாதானத்தை மலேரியா, டெங்கு பரப்பும் கொசுவை போல அழிப்போம் என்றனர். சனாதான தர்மம் என்றால் அது இந்து மதம் தான் என உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியுள்ளது.

கும்பகோணத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹெ.ராஜா
`ரூ.250 கோடியில் கார் ரேஸ் நடத்தும் திமுக-வுக்கு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க நிதியில்லையா?’ – சீமான்

பழநியில் நடந்தது ஆன்மிக மாநாடு இல்லை என அமைச்சர் உதயநிதி பேசினார். சரியாகத்தான் அவர் பேசியுள்ளார், அந்த மாநாடு இந்து விரோத மாநாடு. முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு பணத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் சமீபத்தில் துபாயில் முதலீட்டை ஈர்க்கின்றோம் என சென்றார். ஆனால், தம்புடி பைசா கூட வரவில்லை.

சனாதன இந்து மதத்திற்கு எதிரி அமைச்சர் உதயநிதி. அவர் மீது எல்லா மாநிலங்களிலும் வழக்கு உள்ளது. மூத்த அமைச்சர்கள் எல்லாம் உதயநிதியின் அடிமைகள். தமிழகத்தில் மொழி கொள்கை தொடர்பாக படிக்கின்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும். கிராவல் மண் கொள்ளையடித்த வழக்கில் உள்ள ஊழல் பேர்வழி அமைச்சர் பொன்முடி மொழிகளைப் பற்றி முடிவு எடுப்பதற்கு யார்?. திராவிடம் என்று சொன்னாலே ஊழல், கொள்ளை தான். கிராவல் ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர் பொன்முடி, அமைச்சர் பதவிக்கு அருகதை இல்லாதவர்.

ஹெச்.ராஜா

294 பொறியியல் கல்லூரியில் 980 ஆசிரியர்கள், ஆதார் அட்டையைப் போலியாக வடிவமைத்து, கொடுத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. தனது துறையை கவனிக்க முடியாத திறமையற்ற, திராணியற்ற அமைச்சர் பொன்முடி. அவருக்கு முதுகெலும்பு இருந்தால் வேளச்சேரியில், இந்தியும், சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்கும், முதல்வர் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியை இழுத்து மூட முடியுமா?. முன்னாள் முதல்வர் கருணாநிதி, சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வி இல்லை. அப்படி என்றால், நீங்களே, கருணாநிதியை, மதிக்கவில்லை என்று அர்த்தம்.

மொழிக்கொள்கையில் பிடிவாதம் பிடித்தால், திமுக எம்பி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் அனைத்து சி.பி.எஸ்.சி. பள்ளி முன்பு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம். முதலில் அதை எல்லாம் சமச்சீர் கல்வியாக மாற்றுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருங்கள். மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கலாம். அதை பேசுவதற்கு நீங்கள் யார்? ஒரு மொழியை படிக்க கூடாது என தடுப்பது ஒரு திணிப்புதான்” என்றார்.

Bulldozer Justice: புல்டோசர் நீதி… “இது சரியான அணுகுமுறை அல்ல” – சாட்டை எடுத்த உச்சநீதிமன்றம்!



.

Previous Post

தவெக மாநாடு: 21 கேள்விகளுக்கு பதிலளிக்கக் கோரி காவல்துறை கடிதம்!

Next Post

தலைசிறந்த இயக்குநர் மாரி செல்வராஜ்: ரஜினிகாந்த் பாராட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தலைசிறந்த இயக்குநர் மாரி செல்வராஜ்: ரஜினிகாந்த் பாராட்டு

தலைசிறந்த இயக்குநர் மாரி செல்வராஜ்: ரஜினிகாந்த் பாராட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In