குஜராத் தலித் குடும்பத்திடம் கடந்த 2023-ல் 11.14 கோடி ரூபாய்க்கு நிலத்தை வாங்கிய அதானி குழுமத்தின் AWEL நிறுவனம், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவ்வளவு பெரிய தொகை டெபாசிட் செய்யப்பட்டால் வருமான வரித்துறையின் ஆய்வுக்குட்படும் எனக் கூறி ஏமாற்றப்பட்டதாக அந்த தலித் குடும்பத்தை சேர்ந்த சவகர மன்வர் புகார் அளித்துள்ளார்.
அந்த தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினால் சில ஆண்டுகளில் மதிப்புக் கூடும் என அதானியின் AWEL நிறுவன மேலாளர் தெரிவித்தை நம்பி, தேர்தல் பத்திரங்களை வாங்க அந்த குடும்பம் ஒப்புக்கொண்டுள்ளது.
அந்த குடும்பத்தின் பேரில் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் வாங்கப்பட்ட அந்த தேர்தல் பத்திரங்களை பாஜக பணமாக்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த சூழலில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த தலித் குடும்பம் கடந்த மார்ச் 18 அன்று குஜராத் காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்த நிலையில், இதுவரை FIR பதிவு செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
சவகர மன்வர் குடும்பம் கொடுத்த புகாரில், AWEL நிறுவனத்தின் 4 இயக்குநர்கள், மேலாளர் மகேந்திரசிங் சோதா, பாஜக பிரமுகர் ஹேமந்த் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
The Quint Article: https://thequint.com/news/politics/electoral-bonds-scam-dalit-farmer-says-tricked-into-donating-rs-11-crore-to-bjp-shiv-sena#read-more#read-more…
