Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி குறைப்பு… மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2025
in அரசியல் செய்திகள்
0
”நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி குறைப்பு… மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 21, 2025 5:20 PM IST

“நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News18News18
News18

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், “நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டியை இனி 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம், பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.

நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு  நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள். நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். ஏழைகள், நடுத்தர மக்கள், வர்த்தகத்தினருக்கு ஜிஎஸ்டி சீர்திருத்தம் பயனளிக்கும். ஜிஎஸ்டி குறைப்பு நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஜிஎஸ்டி 2.0 இந்தியாவின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும். ஜிஎஸ்டி குறைப்பு பல்வேறு வரி விகிதங்களை மாற்றி எளிமையாக்கியது.

ஒரே நாடு, ஒரே வரி என்பது தற்போது முழுமை பெற்றுள்ளது. சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99% பொருட்கள் தற்போது 5% வரியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரெட், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும், டிவி ஸ்கூட்டர்களின் விலையும் குறையும்.

இதற்கு முன்னதாக இருந்த குழப்பமான வரி விதிப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் செலுத்தி வந்த பல்வேறு வரிகளை ஜிஎஸ்டி சீர்திருத்தம் மாற்றியுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், அதிக முதலீடுகளுக்கு வழி வகுக்கும். வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. நாளை முதல் 5 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே அமலில் இருக்கும். ஜிஎஸ்டி, வருமான வரி குறைப்பு மூலம் 2.5 லட்சம் கோடி பணப்புழக்கம் ஏற்படும்” எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 21, 2025 5:11 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

”நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி குறைப்பு… மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்” – பிரதமர் நரேந்திர மோடி



.

Previous Post

நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா்: அன்புமணி

Next Post

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In