தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆட்டோமொபைல் துறையில் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் முன்னணியில் இருக்கின்றனர்.
இனி நடைமுறைக்கு வர உள்ள வரிக் குறைப்பால், இந்த மாநிலங்களின் வருவாய் குறையும் போது, நாடு முழுவதும் ரூ.48,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இப்படி மாநில அரசுகளுக்குக் குறையும் வரி வருவாயிற்கு, மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த இழப்பீடு பின்னர் வழங்கப்படும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு “ஆட்டோமொபைல் ஹப்’பாக உள்ளது. இதனால், தமிழ்நாட்டிற்கு வரி இழப்புகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருந்தாலும், சாதாரண மக்களுக்கு இந்த வரி குறைப்பு தமாக்கா தான்.
ஹேப்பி தீபாவளி மக்களே:)“
