Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மணநாளுக்கு முன்தினம் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மணப்பெண்; திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 1, 2024
in Default
0
மணநாளுக்கு முன்தினம் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மணப்பெண்; திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்
41
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மணநாளுக்கு முன்தினம் மணப்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதால், மணமகன் வீட்டார் திருமண ஏற்பாட்டை ரத்து செய்ததும், பாதிக்கப்பட்ட பெண் சட்டத்தின் உதவியை நாடியதுமான சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 23 வயதாகும் பெண்ணுக்கு வரன் நிச்சயிக்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் 3 அன்று திருமணம் நடத்த ஏற்பாடானது. இதற்காக மண்டபம் பார்த்து, உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி இருவீட்டாரும் மும்முரமாக தயாராகி வந்தனர்.

திருமண ஏற்பாடு

இந்த சூழலில் மணநாளுக்கு முந்தைய தினமான டிச.2 அன்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த மணமகளை, அவரை நன்கறிந்த ஆண் ஒருவர் குறிக்கிட்டார். அந்த நபர் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அது குறித்து வீட்டாரிடம் தெரிவிக்கக் கூடாது எனவும் மிரட்டினாராம். இதனால் பயந்துபோன மணமகள் சோகத்தில் முடங்கியிருக்கிறார்.

ஏதோ தவறு நடந்திருப்பதை ஊகித்த மணமகளின் தாயார் வற்புறுத்திக் கேட்டதும் இளம்பெண் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். இந்த தகவல் வெளியே கசிந்ததில் மணவிழாவில் பங்கேற்கும் இருவீட்டார் மத்தியில் அமளிதுமளியானது. இறுதியாக இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து தீர யோசித்த மணமகன் வீட்டார், திருமண ஏற்பாட்டை நிறுத்துவது என முடிவு செய்தனர். விடிந்தால் திருமணம் என்ற சூழலில் நள்ளிரவு இந்த முடிவு எட்டப்பட்டது.

அதன் பிறகு சுமார் ஒன்றரை மாதம் கழித்து காவல் நிலையத்தை அணுகிய இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தார், பாலியல் பலாத்காரம் குறித்து புகார் அளித்தனர். ஜன.23 அன்று புகார் அளித்ததில், அடுத்த நாளே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 24 வயது ஆணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்காக அவரது தனிப்பட்ட தகவல்கள் மட்டுமன்றி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆணின் அடையாளங்களையும் தற்போதைக்கு போலீஸார் வெளிப்படுத்தவில்லை.

கைது

கைது

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டதோடு திருமணமும் நின்று போனதில் இளம்பெண்ணும் அவரது குடும்பத்தாரும் நிலைகுலைந்து வீட்டிலேயே முடங்கிப் போயிருந்தனர். அண்மையில் முசாபர்நகர் போக்சோ நீதிமன்றம் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக ஆயுள் தண்டனை உள்ளிட்ட அதிரடி தீர்ப்புகளை வழங்கி வந்தது. அதனைத் தொடர்ந்தே சட்டத்தின் மீது நம்பிக்கை பெற்ற இளம்பெண் வீட்டார், பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.

Previous Post

இந்தியாவின் கடன் எவ்வளவு தெரியுமா?

Next Post

கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிக்க தடுப்பூசி.!! நிதி அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிக்க தடுப்பூசி.!! நிதி அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு.!!

கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிக்க தடுப்பூசி.!! நிதி அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு.!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In