Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி காவனூர் இந்திரா நர்சரி பள்ளியில் பட்டமளிப்பு விழா..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 1, 2024
in Default
0
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி காவனூர் இந்திரா நர்சரி பள்ளியில் பட்டமளிப்பு விழா..
72
SHARES
116
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உங்கள் பிள்ளைகளின் நிரந்தர சொத்து கல்வி மட்டுமே! கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் பேச்சு!!
ஏப்ரல் 1:- திமிரி அடுத்த காவனூரில் செயல்பட்டு வரும் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் 38-வது ஆண்டு விழாவும் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் பள்ளி நிர்வாகி ஆர். சேட்டு தலைமையில் நடைபெற்றது. பள்ளி கணக்காளர் எஸ். லட்சுமி சேட்டு, கணினி ஆசிரியர் எம்.சுரேஷ் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கோபி அனைவரையும் வரவேற்று பேசினார். யூ .கே .ஜி குழந்தைகளுக்கு ஆற்காடு தொழிலதிபரும் இராணிப்பேட்டை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட தலைவருமான ஜெ. லட்சுமணன், தாழனூர் எஸ். டி .எஸ் மஹால் உரிமையாளர் லயன்ஸ் ஆர். எஸ். சேகர், தாழனூர் சக்ஸஸ் குடிநீர் கம்பெனியின் உரிமையாளர் ஏ. ஜி .சந்திரமோகன் ஆகியோர் மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் பட்டங்கள் வழங்கி பேசியதாவது. நாங்கள் படிக்கும் போது 5 கிலோமீட்டர்,10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வறுமையில் படித்தோம். தற்போது அரசு குழந்தைகள் படிக்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பணம், நிலம், வீடு போன்ற சொத்து சேர்ப்பதை விட நல்ல தரமான கல்வியை குழந்தைகளுக்கு கற்பித்தால் அந்த கல்வியே எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு சிறந்த சொத்தாகும். எல்லா மொழிகளையும் குழந்தைகள் கற்க வேண்டும். குறிப்பாக இந்தி மொழியையும் சேர்த்து படிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தியா முழுவதும் சென்று வர முடியும் என்று பேசினார்.
விழாவில் இராணிப்பேட்டை மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் டாக்டர். பொன் .கு.சரவணன், மணியம்பட்டு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை எம். விஜயகுமாரி, வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட பொருளாளர் எஸ். பாஸ்கரன், பெல் எஸ். பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். மழலையர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா முடிவில் உதவி தலைமை ஆசிரியை எஸ். பிரேமலதா நன்றி கூறினார்.

Previous Post

அதிர்ச்சி வீடியோ :ஆந்திர வனப் பகுதியில் தண்ணீரை தனக்குள் சேமித்து வைக்கும் அதிசய மரம்..

Next Post

கேஜ்ரிவால் கைதுக்கு காரணம் காங்கிரஸ்தான்… பினராயி விஜயன் பகீர்; அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேஜ்ரிவால் கைதுக்கு காரணம் காங்கிரஸ்தான்… பினராயி விஜயன் பகீர்; அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி!

கேஜ்ரிவால் கைதுக்கு காரணம் காங்கிரஸ்தான்... பினராயி விஜயன் பகீர்; அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In