Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிறுதானிய உணவு திட்டத்திற்கு கவர்னர்… ஒப்புதல்; அரசுப் பள்ளிகளில் அமல்படுத்த முடிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 25, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிறுதானிய உணவு திட்டத்திற்கு கவர்னர்… ஒப்புதல்; அரசுப் பள்ளிகளில் அமல்படுத்த முடிவு
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுச்சேரி : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி திட்டத்திற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் இத்திட்டம் புதுச்சேரியில் துவக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 300 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தினை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

இதற்காக குருசுக்குப்பம், பிள்ளைச்சாவடி, சண்முகாபுரம், கிருமாம் பாக்கம், ஏம்பலம், கல்மண்டபம், கூனிச்சம்பட்டு உள்பட 11 இடங்களில் மத்திய சமையல் கூடங்களை நிறுவி, மதிய உணவு தினமும் சப்ளை செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2018 ஜூலை மாதம் காங்., ஆட்சி காலத்தில் புதுச்சேரி அரசு மாணவர்களுக்கு ஒரே விதமான சத்தான மதிய உணவு வழங்க அட்சய பாத்திரம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தின் நவீன சமையல் கூடம் மூலம் மதிய உணவினை சுட சுட தயாரித்து மாணவர்களுக்கு பரிமாறி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி காலையில் பள்ளி மாணவர்களுக்கு சுட சுட பால், வாரத்திற்கு மூன்று முட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி திட்டம் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளி கல்வித் துறையின் சிறுதானிய உணவு திட்ட கோப்பிற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்த மாதம் டிசம்பர் முதல் வாரத்தில் இத்திட்டம் புதுச்சேரியில் துவக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் மாலையில் சிறுதானிய உணவுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுதானிய சிற்றுண்டி திட்டத்தின் மூலம் புதுச்சேரியில்-50,000 பேர், காரைக்கால்-15,000, மாகி-2,800, ஏனாம்-4,400 என, மொத்தம் 72,200 அரசு மாணவர்கள் பயனடைய உள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை சேர்த்தால் 85 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர். இத்திட்டத்திற்கு சராசரியாக ஒரு மாணவருக்கு 6 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 1 கோடி ரூபாய் வரை அரசு செலவிட உள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன், அவர்களுக்கு சிறுதானிய உணவான சுண்டல், கடலை உள்ளிட்டவை வழங்க திட்டமிடப்பட் டுள்ளது.

காலை உணவு திட்டம் மீண்டும் வருமா?

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில், புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை கடந்த காங்., ஆட்சியில், அப்போதைய முதல்வர் நாராயணசாமி கடந்த 2020 நவம்பர் 12ம் தேதி தொடங்கி வைத்தார்.இட்லி, சாம்பார், சட்னி, கேசரி என்று தடபுடலாக துவங்கிய இத்திட்டம் ஒரே ஒரு நாள் மட்டுமே நடைமுறையில் இருந்தது. அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக காலை உணவு திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. எனவே, தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

.

Previous Post

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்:100 கி.மீ. பாலங்கள், 250 கி.மீ. பாலத் தூண்கள் கட்டுமானம் நிறைவு

Next Post

பிஆா்எஸ் பெயரைப் பயன்படுத்தி காங்கிரஸ் வாக்கு சேகரிப்பு: சந்திரசேகா் ராவ் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிஆா்எஸ் பெயரைப் பயன்படுத்தி காங்கிரஸ் வாக்கு சேகரிப்பு: சந்திரசேகா் ராவ் குற்றச்சாட்டு

பிஆா்எஸ் பெயரைப் பயன்படுத்தி காங்கிரஸ் வாக்கு சேகரிப்பு: சந்திரசேகா் ராவ் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In