புதிய தேசிய கல்வி கொள்ளைதான் எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்கு தயாராக இருக்கிறது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில், நாம் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம். சுதந்திரத்துக்குப் பிறகு பொருளாதார நிலையில் 5 – ம் இடத்தில் இருந்த நாம், 11-ம் இடத்திற்கு பின் தங்கினோம். தற்போது 5-ம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். விரைவில் 3 – ம் இடத்திற்கு முன்னேற உள்ளோம். தவறான கல்வி கொள்கையில் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால், அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதில்காலம் கேள்விகுறியாகிவிடும். நாம் சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம்.

இதற்கு காரணம் அப்போது பின்ப்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். திருவள்ளுவர் கற்பித்தல் குறித்து, `கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” எனக் கூறியிருக்கிறார். திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை, பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கையே புதிய இந்தியாவை உருவாக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

