Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சமீபத்திய செய்திகள்

சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – மே 2025 முதல் செயல்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்! | Good news to Chennai people – Kilambakkam railway station to be operated from May 2025

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2025
in சமீபத்திய செய்திகள்
0
சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – மே 2025 முதல் செயல்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்! | Good news to Chennai people – Kilambakkam railway station to be operated from May 2025
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஓராண்டுக்கு முன்னர் திறக்கப்பட்டு தென் மாவட்ட பயணிகளுக்கு சேவை செய்யும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னை போக்குவரத்தை வெகுவாகவே மாற்றியமைத்துள்ளது! இதில் இருந்த ஒரு சின்ன சிக்கல் அருகாமையில் ரயில் நிலையம் இல்லாதது தான், ஆனால் இப்போது அந்த குறையும் தீர்ந்து விட்டது! ஆம், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கி துரிதமாக முடிவடைந்த நிலையில், மே 2025 முதல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது!

Chennai Local Train

சென்னையின் 3 ஆவது பெரிய பேருந்து நிலையம்

கோயம்பேடு பேருந்து நிலையத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க வேண்டும் என்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை புதிதாக கட்டப்பட்ட வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றியது தமிழக அரசு. அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, கும்பகோணம், நாகர்கோயில், இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்க ஆரம்பித்தன.

போதிய வசதியின்றி அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

சென்னையின் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (KCBT) திறக்கப்பட்ட நாளில் இருந்தே பலதரப்பட்ட கருத்துகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பேருந்து நிலையம் சென்னை நகரில் இருந்து எங்கோ உள்ளது, பேருந்து நிலையத்திற்கு அருகில் ரயில் நிலையங்கள் இல்லை, ஆட்டோ கட்டணம் அதிகமாக உள்ளது என்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் தடையின்றி KCBT அருகே புதிய ரயில் நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது!

Chennai Local Train

20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகும் ரயில் நிலையம்

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வண்டலூர்- ஊரப்பாக்கம் புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது. பணிகள் தொடங்கி நடந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் முடிக்க திட்டப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து, பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுதவிர, மழைநீர் கால்வாய் பணி காரணமாக, மேலும் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

மே 2025 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையத்தை வரும் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலமாக, தென் மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளில் வந்து இறங்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் ரயில் போக்குவரத்து வசதியை பூர்த்தி செய்யமுடியும். இதனால் கிளாம்பாக்கம் வந்து செல்லும் பயணிகள் பெரிதும் பலனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

கூடுதல் ரயில்களை இயக்கவும் முடிவு

அதேபோன்று பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய ரயில் நிலையம் என்பதால் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து, மின்சார ரயில்களும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், கூடுதலாக பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றார் போல் 30 சதவீதம் வரை, கூடுதல் மின்சார ரயில்களை, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு தடத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet



.

Previous Post

Vijay Visit Parandur: ’விஜய் செல்வது பரந்தூருக்கா? இல்லை பாகிஸ்தானுக்கா?’ கடும் கட்டுப்பாடுகளை விதித்த போலீஸ்!

Next Post

Sharon Raj murder case | ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த பெண்ணுக்கு தூக்குத் தண்டனை.. நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sharon Raj murder case | ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த பெண்ணுக்கு தூக்குத் தண்டனை.. நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு!

Sharon Raj murder case | ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த பெண்ணுக்கு தூக்குத் தண்டனை.. நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In