Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இன்று நல்ல நாள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 26, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இன்று நல்ல நாள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

26 ஏப்ரல் 2025 (சனிக்கிழமை)

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பூர்வ புண்ணி சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும் வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சந்திரன், புதன், செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் – ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது – அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கன்னி:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் – சுக ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

துலாம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், புதன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் – தைரிய ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன், சூர்யன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது – அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- அயன, சயன, போக ஸ்தானத்தில் – புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல் கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

தனுசு:

கிரகநிலை:

ராசியில் சுக்ரன், குரு, சனி , கேது – களத்திர ஸ்தானத்தில் ராஹு – லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழிலில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். அத்துடன் பணம் வரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மகரம்:

கிரகநிலை:

ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – லாப ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கி டையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் – லாப ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும். செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5



.

Previous Post

”காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” – நடிகர் ரஜினிகாந்த் காட்டம்..!

Next Post

மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' – திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' – எதிர்க்கட்சித் தலைவர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' – திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' – எதிர்க்கட்சித் தலைவர்

மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In