சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று(மே 24) கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையாகிறது.
இதேபோன்று வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.
