சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 13) சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ. 52,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயா்ந்து ரூ. 51,560-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து 6,470-க்கும் , சவரனுக்கு ரூ. 200 உயா்ந்து ரூ. 51,760-க்கும் விற்பனையானது.
