வழக்கமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை விட பார்வையாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்ச்சிகளை தயாரித்தோம்.
ஒரே நேரத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் ஏற்ப சேவையை வழங்க நினைக்கவில்லை. முடிந்த அளவுக்கு அனைவரையும் திருப்திபடுத்தும் வேலைகளை செய்தோம்.
ஓவ்வொருவரும் ஒரே நேரத்தில் பல வகையான சாதனங்களில் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தார்கள்.
இந்த யுக்தி பெரிதாக எங்களுக்கு பயனளித்தது. ஜியோ ஹாட்ஸ்டார் ஐபிஎல் 2025-இல் 100 கோடி பார்வையாளர்களைக் கடந்தது. அது மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே அதிகாமக வசூலித்த விளையாட்டு எடிஷன் என்றால் அது ஐபிஎல் 2025 மட்டுமே.
முதலில் இலவசமாக அளித்து, அவர்களுக்கு விருப்பமெனில் பிறகு வாங்க வைக்க வேண்டும். இது நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது. கடைகளில் இருக்கும் யுக்திதான் என்றார்.
