“தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது”, திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது.
பெரம்பலூரில் கல்குவாரி ஏலத்தில் பாஜக நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்; திமுகவினரை தடுக்க முயற்சித்த அதிகாரிகள், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள காயத்ரி ரகுராம், அண்ணாமலையால் தான் தமிழ்நாடு பாஜக-வில் நிறைய ரௌடிகள் சேர்ந்துள்ளனர் என்னும் தொனியில் கீழ்கண்டவாறு Tweet செய்துள்ளார். அதில் அவர் அண்ணாமலையால்பாஜகவில் சேர்ந்த ரௌடிகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்..
:Source:- அண்ணாமலை பதவி ஏற்ற பின் பாஜகவில் இணைந்த ரவுடிகள் பட்டியல்..
1. புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை – கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்.
2.கல்வெட்டு ரவி – 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள்.
3. புதுவை எழிலரசி – புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்.
4. சீர்காழி சத்தியா – மணல்கொள்ளையை தடுப்பவர்களை கொலை செய்யும் கூலிப்படை.
5. சேலம் முரளி
6. நெற்குன்றம் சூர்யா
7. புதுவை சோழன்
8. புதுவை விக்கி
9. மயிலாப்பூர் டோக்கன் ராஜா
10. பாம் வேலு
11. குரங்கு ஆனந்த்
12. குடவாசல் அருண்
13. சீர்காழி ஆனந்த்.
14. சென்னை பாலாஜி
15. குடந்தை அரசன்
16. தஞ்சை பாம் பாலாஜி
17. ஸ்பீடு பாலாஜி
18. அரியமங்கலம் ஜாகீர்
19. தஞ்சை பாக்கெட் ராஜா
20. குடவாசல் சீனு
21. மயிலாடுதுறை அகோரம்
22. நெடுங்குன்றம் சூர்யா ( சேர்ந்த உடன் பட்டியலின் மாநில செயலாளர் பதவி)
23. விஜயலட்சுமி (கஞ்சா விற்பனை கைது, பாஜகவில் சேர்ந்த உடன் செங்கல்பட்டு மகளிர் அணி செயலாளர்)
24. படப்பை குணா (மிகப்பெரிய ரவுடி.. கட்சியில் சேர்ந்த அன்றே மாநில ஓபிசி அணி செயலாளர் பொறுப்பு)
இது போக 100 க்கும் மேற்பட்ட பொடி ரவுடிகள் சேர்ந்துள்ளனர். ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஐபிஸ் என உருட்டிக்கொள்ளும் டுபாக்கூர்.
நான் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக வார்ரூம் பரப்பப்படுகிறது. வரலாற்றிற்கு திரும்பிச் சென்று சரிபார்க்கலாம். பாஜகவின் கடிதத்தில் நான் ராஜினாமா செய்வதாக அமைப்பின் பொதுச் செயலாளருக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பியிருந்தேன். எனது ராஜினாமா பாஜக ஏற்றுக்கொண்டது அதற்கு முன் நான் பேட்டி கொடுத்துள்ளேன் நான் பாஜகவில் இருந்து வெளியேறுகிறேன் என்று.. “

