Last Updated:
புகார்களுக்கான தீர்வுகளுக்காக, வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் முதல் கிளை மேலாளர்கள் வரை, ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கே.ஒய்.சி., ஆவணங்களை கேட்டு, வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, கே.ஒய்.சி., எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் என்ற ஆவணப் பதிவுக்காக, வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதி நிறுவனத்துக்கு ஆவணங்களை சமர்ப்பித்த பின்பு, மீண்டும் அதே ஆவணங்களை அவர்களிடம் இருந்து வாங்க வேண்டிய அவசியமில்லை.
மத்திய தரவு தளத்தில் இருந்து வாடிக்கையாளரின் விவரங்களை வங்கிகள் பெற இயலும். ஆனால் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்களை கிளைகள் அல்லது அலுவலகங்களை, மத்திய தரவு தளத்தில் இருந்து தகவல்களை பெற அனுமதிப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
Also Read: ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றிய மாமியார்.. வீடியோ வைரல்!
மேலும், கே.ஒய்.சி மறுசமர்ப்பிப்பு கோரிக்கைகளால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்த புகார்கள் நாளுக்கு நாள் ரிசர்வ் வங்கிக்கு அதிகரித்து கொண்டே வருகின்றன. ஆகையால், இதை தவிர்க்க வங்கிகள் தங்களின் குறைதீர்க்கும் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். புகார்களுக்கான தீர்வுகளுக்காக, வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் முதல் கிளை மேலாளர்கள் வரை, ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
March 19, 2025 11:02 AM IST

