Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரி: தேர்தல் தோல்வியால் விரக்தி; அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய பாஜக மாநிலச் செயலாளர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2024
in அரசியல் செய்திகள்
0
புதுச்சேரி: தேர்தல் தோல்வியால் விரக்தி; அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய பாஜக மாநிலச் செயலாளர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுச்சேரி பா.ஜ.க தலைவராக இருந்த சாமிநாதனை நீக்கிவிட்டு, தங்கள் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி-யான செல்வகணபதியை தலைவராக அறிவித்தது அக்கட்சித் தலைமை. தலைவராக அவர் பதவியேற்றது முதல், கட்சியின் சீனியர்களை ஓரம் கட்டுவதுடன், அவர்களின் பதவிகளை பறித்து தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பா.ஜ.க-வைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டார். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் ஆளும் கட்சி அமைச்சராகவே களமிறங்கிய நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் 1,36,516 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

மாநிலம் முழுவதும் நிலவும் போதை கலாசாரம், மாணவர்களிடையே கஞ்சா புழக்கம், மின்சாரத்துறை தனியார்மயமாக்கும் முயற்சி, மாநில அந்தஸ்து வழங்காதது என ஆளும் கட்சி மீதான அதிருப்திகளே பா.ஜ.க தோல்விக்கு காரணம் என்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதேசமயம், பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரான சாமிநாதன், `புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க-வுக்கு அமைப்பு ரீதியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி, கிளை, தொகுதி, மாவட்ட மற்றும் மாநிலத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பொறுப்பேற்ற அனைவரும் திறமையாக செயல்பட்டதால், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனால் கூட்டணி ஆட்சியிலும் பாரதிய ஜனதா கட்சி பங்கு பெற்றது.

இந்த நிலையில் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திடீரென்று கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்ற தற்போதைய தலைவர் செல்வகணபதி அவர்கள், கட்சியில் காலம் காலமாக சித்தாந்த ரீதியில் பணியாற்றிய நிர்வாகிகளை நீக்கினார். கிளை, கேந்திரத்தை கலைத்துவிட்டு, சுயநலத்துடன் தன்னுடைய சொந்த நிறுவனம் போல கட்சியை தவறாக வழிநடத்தி வருகிறார். ஆளும் கட்சியின் அமைச்சராக இருக்கும் ஒருவர் முதல் முறையாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு தற்போதைய தலைவர் செல்வகணபதியும், அவரது மோசமான நிர்வாகத் திறமையும்தான் காரணம். எனவே இந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று காரசாரமாக வெளியிட்டிருந்த அறிக்கை கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

சாமிநாதன், செல்வகணபதி

இந்த நிலையில்தான், புதுச்சேரி பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளரான ரத்தினவேல், கட்சி அலுவலகத்துக்குள் அரை நிர்வாணத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேல் சட்டையை கழற்றிவிட்டு அங்கிருந்த பாரதமாதா சிலை அருகில் அமர்ந்து கொண்ட அவர், `பா.ஜ.க தலைவர் செல்வகணபதியை உடனே மாற்ற வேண்டும்’ என்று கோஷம் எழுப்பி தர்ணா செய்தார். அதனால் பா.ஜ.க தலைவர் செல்வகணபதி தரப்பினருக்கும், ரத்தினவேல் தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதையடுத்து அங்கு விரைந்த சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்  ரத்தினவேலுவை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். தேர்தல் தோல்வி காரணமாக தமிழக பா.ஜ.க-வைப் போல புதுச்சேரியிலும், கோஷ்டி மோதல் ஏற்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

`கட்சித் தலைவரின் துரோகமே தோல்விக்கு காரணம்!’ – புதுச்சேரி பாஜக-வில் வெடித்த கோஷ்டி மோதல்



.

Previous Post

6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை… தெலங்கானாவில் நடந்த கொடூர சம்பவம்!

Next Post

இந்திய ராணுவத்தில் நாகாஸ்திரா-1 தற்கொலைப்படை ட்ரோன் சேர்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய ராணுவத்தில் நாகாஸ்திரா-1 தற்கொலைப்படை ட்ரோன் சேர்ப்பு!

இந்திய ராணுவத்தில் நாகாஸ்திரா-1 தற்கொலைப்படை ட்ரோன் சேர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In