முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கோரிக்கை மனுவை படித்துப் பார்த்தார். பின்னர், `தி.மு.க-வின் கொள்கைதான் மதுவிலக்குக் கொள்கை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே நீங்கள் நடத்துகிற மாநாட்டில் தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள். இந்த கோரிக்கையை உங்களோடு சேர்ந்து நாங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு மதுவிலக்கை படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு நடைமுறைப்படுத்துவோம்! என முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார்” என்றார்.

மேலும், `ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு’ என நான் பேசியது பற்றி முதலமைச்சரிடம் எதுவும் பேசவில்லை. ஏனென்றால், 1999-ல் இருந்தே நான் பேசி வரும் கருத்துதான். அதை எப்போது வலுவாகப் பேசவேண்டுமோ அப்போது வலுவாகப் பேசுவோம். அதேபோல, தேர்தலுக்கும் இப்போதைய மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயிரக்கணக்கான கைம்பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்தியே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். இதை திசைதிருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்துப் பார்க்க வேண்டாம். தி.மு.க-வும் வி.சி.க-வுக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்லை. தி.மு.க கூட்டணியில் தொடர்வதில் உறுதியாகவே இருக்கிறோம்!” என்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தொடக்கத்தில் `மது ஒழிப்பு, படிப்படியாக மதுக்கடைகள் குறைப்பு’ என்று அதிரடியாகப் பேசி வந்தவர், முதலமைச்சரை சந்தித்து வந்தபிறகு `மது விற்பனை இலக்கு குறைப்பு, ஒன்றிய அரசிடம் கோரிக்கை’ என்று ரூட்டை மாற்றிவிட்டாரே திருமாவளவன்’ என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

