மத்திய பிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் கவிழ்ந்த நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
ரயில் கவிழ்ந்தது எப்படி?
தில்லி – மும்பை வழித்தடத்தில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து போபால் அருகேவுள்ள பகானியா ரயில் நிலையம் நோக்கி வியாழக்கிழமை நள்ளிரவு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தில் இருந்து திடீரென தடம்புரண்ட சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.