Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஏழை மாணவியருக்கு இலவச கல்வி: ம.பி.,யில் பா.ஜ., தேர்தல் அறிக்கை தாராளம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஏழை மாணவியருக்கு இலவச கல்வி: ம.பி.,யில் பா.ஜ., தேர்தல் அறிக்கை  தாராளம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


போபால்:சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மத்திய பிரதேசத்தில், பா.ஜ., தன் தேர்தல்

அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், ‘20,000 கோடி ரூபாய் மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்; ஏழை மாணவியருக்கு பட்டமேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 230 தொகுதிகளுக்கு வரும், 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றன. ஆளும் பா.ஜ., சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை நேற்று வெளியிட்டது.

மேற்படிப்பு

அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அக்கட்சியின் மாநில தலைவர் வி.டி. சர்மா ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை போபாலில் வெளியிட்டனர்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவியருக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். கோதுமை, ஒரு குவின்டால் 2,700 ரூபாய்க்கும், நெல் 3,100 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும்.அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு, 450 ரூபாய்க்கு

சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும்

.

மத்திய பிரதேச தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய பிரதேச மருத்துவ அறிவியல் நிறுவனம் நிறுவப்படும். ‘கிசான் சம்மன் நிதி’ மற்றும் ‘கிசான் கல்யாண் யோஜனா’ ஆகிய திட்டங்களின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு, 12,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். புதிததாக துவங்கப்படும் ‘முக்கிய மந்திரி ஜன் ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் வாயிலாக, சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.

கிராமங்களில் வசிக்கும், 15 லட்சம் பெண்களுக்கு திறன்மேம்பாட்டுக்கான திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலை வாய்ப்பு அல்லது சுயதொழில் வாய்ப்பு அளிக்கப்படும். மாநிலத்தில் உள்ள, 13 கலாசார மையங்கள் மேம்படுத்தப்படும்.

புதிய விமான நிலையம்

ஆறு புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். இங்குள்ள 80 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படுவதுடன், சிங்ரோல், ஹெஹ்டோலில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். உயர் தொழில்நுட்ப மருத்துவமனைகளை அமைக்க, சுகாதாரத் துறையில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காகிதமாக இருக்காது!

பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதிகள் காகிதமாக மட்டும் இருக்காது. அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க, ஒரு குழு அமைக்கப்படும். இரட்டை இன்ஜின் அரசுகளால் ம.பி.,யில் அதிக அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நட்டா

தலைவர், பா.ஜ.,

மக்களிடம் ஆலோசனை!

மத்திய பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், பா.ஜ., சார்பில் மாநிலம் முழுதும், ‘ஜன் ஆசிர்வாத் யாத்ரா’ என்ற பெயரில், யாத்திரை நடத்தப்பட்டது. இதில் மக்களிடம் கேட்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் தான், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

வி.டி.சர்மா

ம.பி., மாநில பா.ஜ., தலைவர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்



.

Previous Post

ராஷ்மிகா போலி விடியோ விவகாரம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்கு!

Next Post

எல்லையில் தீபாவளி கொண்டாடிய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எல்லையில் தீபாவளி கொண்டாடிய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

எல்லையில் தீபாவளி கொண்டாடிய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In