அவர்கள் பொதுமக்களை தங்களது வாட்ஸ்அப் குழுவில் சேர அழைத்து, ஷேர் மார்க்கெட் குறித்த ஆலோசனைகளை வழங்கி, முதலீட்டில் மிகைப்படுத்தப்பட்ட லாபத்தை உறுதியளிக்கின்றனர். “சில விளம்பரங்களில், ‘இப்போதுதான் வாய்ப்பு, எனது வாட்ஸ்அப் குழுவில் இலவசமாக சேருங்கள். வெறும் 7 நாட்களில், உங்கள் சொத்துக்களை இரட்டிப்பாக்குங்கள்’ போன்ற செய்திகள் உள்ளன,” என்று எஸ்பிஐ கூறியுள்ளது.
