அரசு அலுவலர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிய கூடாது என்கின்றனர். நிலமை அவ்வாறு இருக்க வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 28 ஆண்டு காலமாக மேற்கண்ட நபர் ஆனந்தன் என்பவர் ரிக்கார்ட் கிளார்க் ஆக பணிபுரிந்து பல் வேறு முறைகேடு நூதனமான முறையில் அரங்கேற்றி வருகிறாராம்.. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல் இவரது நடவடிக்கைகள் உள்ளதாக சக அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் பேசிவருகின்றனர்.
தற்போது தி.மு.க ஆட்சியில் அலுவலகத்தில் வாயிலாக நடைபெறும் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் டெண்டர் இவரின் ஆலோசனை படியும் இவர் தலைமையின் நடை பெறுவதாக சொல்கின்றனர். தற்போது விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதையொட்டி. அரசு அலுவலர்கள் பதவி காலத்தை கருத்தில் கொண்டு பணிமாறுதல் செய்து வரும் நிலையில் மேற்கண்ட தில்லாலங்கடி ஆனந்தன் என்பவரை பணி மாறுதல் தரவில்லை.
இதற்கு ஆட்சி ஆளர்கள் துணை போவதால் தான் பணி மாறுதல் செய்யவில்லையா? என்ற கேள்வி முன்வைத்து அரசி விமசர்கள் குற்றம் சாட்டி பேசிவருகின்றனர். எனவே. இத் தகவல் உண்மை தன்மை விசாரித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவோம்.


வேலூர் மாவட்ட கலெக்டர் இந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்