Last Updated:
மத்தியபிரதேசத்தில் கோயில் திருவிழாவுக்கு சென்ற குடும்பத்தின் கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், ஆனால் ஆடு காயமின்றி தப்பியது.
மத்தியபிரதேசத்தில் கோயில் திருவிழாவில் பலிகொடுக்க ஆட்டுடன் சென்றவர்களின் கார் விபத்தில் சிக்கியதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், ஆடு மட்டும் சிறு காயங்கள் கூட இல்லாமல் தப்பியது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே சவ்கிதால் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 6 பேர் நரசிங்கபூரில் உள்ள துலா தேவ் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது சோம்தி நதியின் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது. இதில் காரில் சென்ற நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் சிறு காயம் கூட இல்லாமல் ஆடு தப்பியது. விபத்தில் நால்வர் உயிரிழந்தபோதும், காயம் கூட இல்லாமல் தப்பிய ஆட்டை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
April 15, 2025 4:27 PM IST
கோயில் திருவிழாவுக்கு ஆட்டை பலி கொடுக்க சென்ற 4 பேர் விபத்தில் உயிரிழந்த பரிதாபம்.. சிறு காயம் கூட இல்லாமல் ஆடு தப்பியது!

