திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட நீதிபதி கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த், வழக்குரைஞர் தனஞ்செய் ராமச்சந்திரன், நீதிமன்ற பணியாளர்கள் வாசு ராமநாதன், ஸ்ரீதர் குமார், உதயசூரியன், பாதுகாப்பு போலீஸ்காரர் நவீன் குமார் ஆகிய 6 பேர் இன்னோவா காரில் திருச்செந்தூரில் இருந்து புதன்கிழமை காலை தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலகரந்தை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இன்னோவா கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த வழக்குரைறிஞர் தனஞ்செய் ராமச்சந்திரன், போலீஸ்காரர் நவீன் குமார், நீதிமன்ற பணியாளர்கள் ஸ்ரீதர் குமார், வாசு ராமநாதன் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த் மற்றும் நீதிமன்ற நீதிமன்ற பணியாளர் உதயசூரியன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
