Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வங்க தேசத்தில் ரயிலுக்கு தீ வைப்பு: நான்கு பேர் பலி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 20, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வங்க தேசத்தில் ரயிலுக்கு தீ வைப்பு: நான்கு பேர் பலி
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டாக்கா நம் அண்டை நாடான வங்க தேசத்தில், பொதுத் தேர்தலுக்கு எதிராக எதிர்க்கட்சி நடத்திய போராட்டத்தின்போது, பயணியர் ரயில் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது; இதில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகினர்.

வங்கதேசத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆளும் அவாமி லீக் ஆட்சியில் இருந்தால் தேர்தல் நியாயமான முறையில் நடக்காது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, அதற்கு முன்பாக காபந்து அரசை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாடு முழுதும் நேற்று வங்கதேச தேசியவாத கட்சி போராட்டம் நடத்தியது. அப்போது, தலைநகர் டாக்காவில் இருந்து புறப்பட்ட பயணியர் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

புறப்பட்ட சில மணி நேரத்தில் ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, தேஜ்காவ்ன் நிலையத்தில், ரயில் நிறுத்தப்பட்டது.

அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட நான்கு பேர் உடல் கருகி பலியாகினர். சிறுவன் ஒருவன் மாயமானான்.

மூன்று ரயில் பெட்டிகளும் தீயில் கருகி சேதமடைந்தன. உயிரிழந்தவர்கள் இருவர் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

.

Previous Post

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் – ஓய்வூதியர் தினம் கொண்டாட்டம்.

Next Post

பார்லிமென்ட் செல்வதற்கு ‘பாஸ்’ கொடுத்த பிரதாப் சிம்ஹாவால் மைசூரு தொகுதியில் பா.ஜ.,வுக்கு கடும் நெருக்கடி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பார்லிமென்ட் செல்வதற்கு ‘பாஸ்’ கொடுத்த பிரதாப் சிம்ஹாவால் மைசூரு தொகுதியில் பா.ஜ.,வுக்கு கடும் நெருக்கடி..!

பார்லிமென்ட் செல்வதற்கு 'பாஸ்' கொடுத்த பிரதாப் சிம்ஹாவால் மைசூரு தொகுதியில் பா.ஜ.,வுக்கு கடும் நெருக்கடி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In