Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எம்.எல்.ஏ. பென்ஷன் கோரும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்.. ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் விண்ணப்பம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 31, 2025
in அரசியல் செய்திகள்
0
எம்.எல்.ஏ. பென்ஷன் கோரும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்.. ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் விண்ணப்பம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 31, 2025 3:44 PM IST

ஜகதீப் தன்கர் ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் எம்.எல்.ஏ. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தார்.

ஜகதீப் தன்கர்ஜகதீப் தன்கர்
ஜகதீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கர் தற்போது எம்.எல்.ஏ. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் காரணம் காட்டி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவிற்கு ஆளும் பாஜக அழுத்தம் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதையும், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.

இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கர் எம்.எல்.ஏ. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜகதீப் தன்கர் கடந்த 1993 முதல் 1998 வரை ராஜஸ்தான் மாநிலம், கிஷன்கர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்துவந்தார். இதற்கான ஓய்வூதியத்தை 2019ஆம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படும் வரை பெற்றுவந்தார். பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் அந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் அந்த ஓய்வூதியத்தை கேட்டு ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு ஓய்வூதிய விண்ணப்பத்தின் மீதான வேலைகள் துவங்கியுள்ளதாகவும், அவர் குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த தினத்தில் இருந்து அது வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

ராஜஸ்தானில் ஓய்வு பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ. 35,000 ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும், 70 வயதுக்கு மேற்பட்டவர் என்றால் அத்துடன் 20% கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்படும். அந்த வகையில் தற்போது 74 வயதான ஜகதீப் தன்கருக்கு அவரது மருத்துவ பராமரிப்பு, பயணப்படி உள்ளிட்டவற்றுடன் ரூ. 42,000 வழங்கப்படும். இதுமட்டுமின்றி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவற்றின் ஓய்வூதியத்துடன் தற்போது முன்னாள் எம்.எல்.ஏவுக்கான ஓய்வூதியமும் சேர்த்து வழங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 31, 2025 3:33 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

எம்.எல்.ஏ. பென்ஷன் கோரும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்.. ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் விண்ணப்பம்



.

Previous Post

கேரளத்தில் பிரபல யூடியூபர் மீது தாக்குதல்| YouTuber assaulted in Kerala

Next Post

டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!

டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In