Last Updated:
இந்தச் சம்பவம் நடந்து நாட்கள் கடந்தும், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
புலியைப் பிடிப்பதில் அலட்சியம் காட்டியதாகக் குற்றம் சாட்டி, புலிக்காக அமைக்கப்பட்ட கூண்டில் வனத்துறை அதிகாரிகளை அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவமானது கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டம், குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள பொம்மலாபுரா கிராமத்தில் நடந்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான கிராமப்புறங்களில் உள்ள மனித குடியிருப்புகளில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சம்பவங்கள் கர்நாடகாவில் மட்டுமல்ல, நாட்டின் மற்ற மாநிலங்களிலும் காணப்படுகின்றன. இதற்கிடையில், புலியைப் பிடிக்கச் சென்ற வனத்துறை ஊழியர்களை, ஒரு கிராம மக்கள் புலி கூண்டில் அடைத்து வைத்தனர்.
போலீசாரின் கூற்றுப்படி, பந்திபோரா தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக, புலி நடமாட்டம் இருப்பதாகவும், அது கால்நடைகளைத் தாக்கி விவசாயிகளுக்கு சேதம் விளைவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பொம்மலாபுரா கிராமத்திற்கு அருகில் புலி ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து வனத்துறை அதிகாரிகள், புலியைப் பிடிக்க ஒரு கூண்டு அமைத்தனர். கிராம மக்களின் கூற்றுப்படி, புலி பிடிபடவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்து நாட்கள் கடந்தும், செவ்வாய்க்கிழமை வரை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற கிராமவாசிகள், போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூண்டில் அடைக்கப்பட்ட அதிகாரிகளை விடுவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை வனத்துறை அதிகாரிகள் எந்தப் புகாரும் பதிவு செய்யவில்லை என்றும், ஏதேனும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
September 15, 2025 1:19 PM IST

