Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்திய தாக்குதலில் இறந்தவர்கள் யார்? ஆதாரத்தை வெளியிட்ட வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்திய தாக்குதலில் இறந்தவர்கள் யார்? ஆதாரத்தை வெளியிட்ட வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 08, 2025 6:46 PM IST

வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தியா தீவிரவாத முகாம்களை மட்டுமே தாக்கியதாகவும், பாகிஸ்தான் சரியான பதிலடி பெற்றதாகவும் கூறினார்.

News18News18
News18

இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்திய எல்லை கிராமங்களின் மீது தாக்குதல் நடத்திவருகிறது. அதேபோல், பாகிஸ்தான் சில குற்றச்சாட்டுகளை இந்தியா மீது வைத்துவருகிறது. இந்நிலையில், இன்று வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்து மீண்டும் விளக்கம் கொடுத்தனர்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள இந்த விவகாரம் என்பது முதலில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் உருவானது. இந்தியா எந்த தாக்குதல்களையும் தானாக செய்யவில்லை. எந்த நாடு முதலில் தாக்குதலில் ஈடுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும். எந்த இராணுவப் பகுதிகளும் இந்தியாவால் தாக்கப்படவில்லை. தீவிரவாத முகாம்களை மட்டுமே தாக்கப்பட்டது. பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு தகர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய டிஆர்எஃப், லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பு. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இல்லை என அந்நாட்டு அமைச்சர் தொலைக்காட்சி ஒன்றில் கூறியுள்ளார். சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானில் இருந்து தான் தொடங்கியது. ஒசாமா பின்லேடன் எங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டார் என்பதை நான் கூறி தெரிய வேண்டிய அவசியமில்லை. மசூத் அசார் உள்ளிட்ட தீவிரவாத தலைவர்களின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது.

மும்பை 2008 தாக்குதல் மற்றும் பதான்கோட் தாக்குதல்கள் ஆகிய இரண்டிலும், முழுமையான ஒத்துழைப்பை இந்தியா வழங்கி, பாரன்சிக் தடயங்கள் மற்றும் ஆவணங்கள், கால் ரெக்கார்டுகள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் இந்தியா வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தீவிரவாதிகளின் முகவரிகள் மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் அலுவலக பணியாளர்கள் தகவல்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கினோம். ஆனால் பாகிஸ்தான் விசாரணைக்கான அனைத்து கதவுகளையும் மூடிவிட்டது.

பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கவே தற்போது பதிலடி கொடுத்து வருகிறோம். இந்தியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் இந்தப் புகைப்படம் வேறு விதமான பதிலை தருகிறது (கையில் பயங்கரவாதிகள் பங்கேற்ற இறுதிச் சடங்கு படத்தை எடுத்து காட்டினார்). எல்லையில் இருந்து ஏராளமான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனை நம்ப வேண்டாம். பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் ஒத்துழைத்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்திய தாக்குதலில் இறந்தவர்கள் யார்? ஆதாரத்தை வெளியிட்ட வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி



.

Previous Post

ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In