2021, ஜூன் மாதம் கொரனோ கலகட்டத்தின்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், `மத்திய அரசு ஒரு போர்ட்டலை உருவாக்கி அதில் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களைப் பதிவுசெய்து ரேஷன் கார்டு மற்றும் உணவுப்பொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றது. அதைத்தொடர்ந்து, அந்த ஆண்டு ஆகஸ்டில், புலம்பெயர் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் உள்பட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு வழங்குதற்காக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இ-ஷ்ரம் (eShram) போர்ட்டலைத் தொடங்கியது.
