Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் நீட் விலக்கு கோரி தீர்மானம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 23, 2024
in Default
1
தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் நீட் விலக்கு கோரி தீர்மானம்..!
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூரு: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில், பெங்களூரில் அம்மாநில அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு, ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ மற்றும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதி வரையறை ஆகிய மூன்றிற்கும் எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக, நீட் மீதான சர்ச்சைக்கு மத்தியில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) ரத்து செய்து, மாநிலங்கள் தாங்களாகவே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார்.

3 தீர்மானம்: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த 3 தீர்மானங்களும் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், தொடர்ந்து அந்த தீர்மானங்கள் மீதான விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல், ‘கிரேட்டர் பெங்களூரு ஆளுமை சட்டம்-2024க்கு’ (GBA) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக முன்னாள் முதன்மைச் செயலாளர் பி.எஸ்.பட்டீல் தலைமையில் 4 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு கடந்த சில நாள்களுக்கு முன்னர், பெங்களூரு மாநகராட்சியில் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும் என அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

அதில் பெங்களூருவுக்கு உள்கட்டமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதற்காக ‘கிரேட்டர் பெங்களூரு ஆணையம்'(GBA) உருவாக்கப்பட வேண்டும். பெங்களூரு மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை 400ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறிப்பிடப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு வழியில் கர்நாடகா: முன்னதாக கடந்த மாதம் நீட் தேர்வை தேசிய அளவில் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதேபோல், தற்போது கர்நாடகாவிலும் நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

Previous Post

பிரீமியர் லீக் போட்டியில் வென்ற மதுரை ரயில்வே கிரிக்கெட் அணிக்கு பாராட்டு….

Next Post

அரியணையை காப்பாற்றும் மத்திய பட்ஜெட்..! ராகுல் காந்தி தடாலடி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரியணையை காப்பாற்றும் மத்திய பட்ஜெட்..! ராகுல் காந்தி தடாலடி..!

அரியணையை காப்பாற்றும் மத்திய பட்ஜெட்..! ராகுல் காந்தி தடாலடி..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In